அரையிறுதி சுற்றுக்குள் நுழையுமா சென்னை?
சென்னையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திலும்,அடுத்து வரும் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டும் சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் கொல்கத்தா அணியும் இதே நிலையில்தான் உள்ளது. இரு அணிகளுமே வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுமே இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி தலா 5 வெற்றி, 6 தோல்விகளை பெற்றுள்ளன. இரு அணிகளும் 10 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தாலும்,ரன்ரேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது.

