இனி சினிமாக்களில் நடிக்க மாட்டேன்- நடிகை பூஜா

இது குறித்து நடிகை பூஜா தெரிவிக்கையில் “நான் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டபோது, என் அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் நடிப்பதற்கு அனுமதித்தார். சமீபகாலமாக அப்பாவை சந்திக்கும் உறவினர்கள் எல்லாரும், பூஜாவை இன்னும் எவ்வளவு நாளைக்கு நடிக்க வைக்கப் போகிறாய்? அவளுக்கு என்று ஒரு குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமா? என் கேட்கிறார்கள். இதனால், நீ நடித்தது போதும்னு அப்பாவும், அம்மாவும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். அவர்களின் மனதை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கிறேன்.
நான் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்று அப்பாவும் அம்மாவும் விரும்புகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது ஒரு மகள் என்ற முறையின் என் கடமையாக நினைக்கிறேன். எப்போது என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. அது நடக்கும்போது நடக்கட்டும். எனக்கு வரப்போகிறவர் என்னிடம் அன்பாக இருந்தால் போதும். வருங்கால கணவர் குறித்து எனக்கு பெரிய கனவுகள் எதுவும் இல்லை. ஓரளவு எனக் பொருத்தமாக இருந்தால் போதும். அவருடைய நிறம் பற்றியெல்லாம் கவலை இல்லை. சிகரெட் புகைப்பதும், குடிப்பதும் எனக்கு பிடிக்காது. அந்த பழக்கங்கள் இல்லாதவராக இருந்தால் போதும்.
இலங்கையில் இருக்கும் எனது தாத்தாவுக்கு 95 வயதாகிறது. பாட்டிக்கு 90 வயது. கடைசி காலத்தில் அவர்கள் மீது அன்பை முழுமையாக செலுத்தப் போகிறேன். இலங்கையில் தங்கியிருந்து தாத்தா – பாட்டியை கவனித்துக் கொள்வதுதான் எனது இப்போதைய முழுநேர வேலை”.
என்று கூறினார்.

