இறுதிப் போட்டியில் விளையாடுவேன்: சச்சின் உறுதி
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் நடந்த அரை இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியின்போது, பெங்களூர் வீரர் டிராவிட் கொடுத்த கேட்சை பிடிக்கும் முயற்சியில் சச்சின் வலது கை விரல்களுக்கிடையே தசை கிழிந்து ரத்தம் கொட்டியது.
இறுதிப் போட்டியில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து சச்சின் கூறியதாவது, கையில் காயம் ஏற்பட்டிருந்தாலும், ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட முடியும் என நம்புவதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சச்சின் கூறினார்.
