ஐடி நிறுவனமான விப்ரோவின் லாபம்
ஐடி நிறுவனமான விப்ரோவின் லாபம் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மார்ச்சுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டு லாபம் ரூ.1.209 கோடி என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் நிகர வருமானம் ரூ.6,982 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தை ஆண்டு இதே காலாண்டில் ரூ. 6.451.4 கோடியாக இருந்தது நிகர வருவாய்.
இதைத் தொடர்ந்து தனது பங்குதாரர்களுக்கு 2:3 என்ற விகிதத்தில் போனஸ் அறிவித்துள்ளது விப்ரோ
