ஐ.பி.எல் – டுவென்டி-20 கிரிக்கெட் அரையிறுதிக்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
தர்மசாலா : ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலையில், தோனி கடைசியில் 2 சிக்சர் அடித்த வெற்றியை உறுதி செய்தார். தோனி அபாராமாக விளையாடி 54 ரன்கள் யடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். பத்ரிநாத் 53 ரன்களும் சேர்த்தனர்.

