ஐ .பி.ல் கிரிக்கெட் – சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி
சென்னை ஏப்ரல் 13, ஐ .பி.ல் கிரிக்கெட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கங்குலி கிரிஸ் கேல் களமிறங்கினர். அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் களமிறங்கிய சென்னை அணி 13.3 ஓவர்களில் ஒரேயொரு விக்கெட்டை மட்டும் இழந்து 143 ரன்களைக் குவித்தது.
ரெய்னா அவுட்டாகாமல் 78 ரன்களும், முரளி விஜய் 50 ரன்களும் எடுத்தனர்.
