ஐ பி ல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி
மூன்றாவது ஐ.பி.எல்., ‘டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த 37வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 4விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஹெய்டன் 35 ரன் எடுத்தார். இதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்படி சென்னை அணி 24ரன்னில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது 23 ரன்கள் எடுத்தும், சிறப்பாக பந்து வீசி 2.3 ஓவரில் 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய சுரேஷ் ரெய்னாவுக்கு வழங்கப்பட்டது.
