August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » தெரிந்து கொள்வோம்

“கனவுகள்”-சில உண்மைகள்

Submitted by admin on April 11, 2010 – 5:26 amNo Comment
கனவுகளை பற்றி முதன் முதலில் ஆராய்ச்சி செய்தவர் சிக்மன்ட் ப்ராய்ட் . இவர்  கனவுகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ‘கனவுகளின் விளக்கங்கள்’ என்று இவர் சொன்னது தான்  இன்று வரை உலகில் உளவியலின் வேதம். மனித மனங்களை பற்றியும் மனித நடத்தைகள், போக்குகள் பற்றியும் ஆய்வு செய்து பல்வேறு  கொள்கைகளை வகுத்தார்.
“நாம் காணும் கனவுகள் எல்லாமே நம்மால் முடியாதவற்றை கற்பனையாக நிறைவேற்றி கொள்ளும் ஒரு குறுக்கு வழி தான்” என்பது அவரின் கண்டுபிடிப்பு.
கனவுகளை பற்றிய சில உண்மைகள்.
  • பிறவியிலேயே கண் தெரியதவர்களுக்கும் கனவு வரும். ஆனால், கனவில் காட்சிகள் தெரியாது. வெறும் சத்தம், தொடு உணர்ச்சி ஆகியவை மட்டுமே இருக்கும்.  
  • நாம் தூங்க போவதற்கு முன் வைட்டமின் பி 6 ஐ ஏதாவது ஒரு வகையில் எடுத்து கொண்டால் அன்றைய தூக்கத்தில் திகில் கனவுகள் வரும்.
  • கனவுகளுக்கும் டிஜிட்டல் வாட்சுகளுக்கும்  ஆகாது. கனவில் டிஜிட்டல் எழுத்துக்கள்  புரிந்து கொள்ள முடியாத படி விநோதமாக இருக்கும்.
  • ஒரு கனவு ஐந்து முதல் இருபது நிமிடம் வரை நீடிக்கும். ஒரு இரவில் எத்தனை  முறை வேண்டுமானாலும் கனவுகள் வரலாம்.
  • குறட்டை விடும் போது கனவுகள் வருவதில்லை. 
  • தூக்கத்தில் கனவுகள் வரவில்லை என்றால் ப்ரோடீன் குறைபாடு, மனநிலை பாதிப்பு உள்ளது என்று அர்த்தம். 
  • குளிர்ச்சியான அறையில் இருந்தால் கெட்ட கனவுகள் வரும்……. 

Comments are closed.