கிர்கிஸ்தான் அதிபர் ராஜினாமா
கிர்கிஸ்தான் அதிபர் குர்மான்பெர்க் பாகியேவ், நாட்டைவிட்டுத் தப்பியோடினார். 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இவர் அளவுக்கு அதிகமாக ஊழல் செய்து சொத்துக்களை வாங்கி குவித்தார், நிர்வாகத்தில் இறின் கவனம் செலுத்தாமல் இருந்ததால், எதிர்க்கட்சிக்காரர்களும் மக்களும் அதிபர் மீது வெறுப்பில் இருந்தனர். நேற்று முன்தினம் அந்த வெறுப்பு கலவரமாக மாறியது.
அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். அங்குள்ள பொருட்களை தூக்கி வெளியில் வீசி, தீ வைத்தனர். பாதுகாப்புப் படையினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதலில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராணுவம், போலீஸ் உள்பட நிர்வாக அதிகாரிகள் அனைவரும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ரோஜா ஒடுன்பயெவா தலைமையில், தற்காலிக அரசு அமைத்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
பாராளுமன்றத்தை கலைத்து விட்டதாகவும், இடைக்கால அதிபராக ரோசா ஒடுனன் பயாவே இருப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் தற்காலிக அரசுக்கு, ஆதரவு அளிக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
