சானியா வீட்டில் மகிழ்ச்சி
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இடையேயான திருமணம் தொடர்பாக நீடித்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததால், சானியாவின் வீட்டில் மகிழ்ச்சி திரும்பியுள்ளது.
வரும் 15ம் தேதி நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் 1,000 விருந்தினர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் , பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கு, புதிய பிரச்னை ஏற்படும் என, சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சோயப் மாலிக் தன் முதல் மனைவி ஆயிஷா சித்திக்கை விவாகரத்து செய்த பத்திரத்தில், தந்தையின் பெயர் மாலிக் சலீம் உசேன் எனவும் சானியாவின் திருமணப் பத்திரிகையில், தன் தந்தை பெயர் மாலிக் பகீர் உசேன் எனவும் , குறிப்பிட்டுள்ளார். எனவே, விவாகரத்து பத்திரத்தில், தவறான தகவல்களை அளித்தாக, ஆயிஷா புகார் செய்தால், சோயப்பிற்கு புதிய பிரச்னை ஏற்படும் என, சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

