சீனாவில் நிலநடுக்கம் சுமார் 600 பேர் பலி
வியாழன், 14 ஏப்ரல் – சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கியுங்காய் மாகாணத்தில் பகுதியில் பயங்கர நிலநடுக்கத்திற்கு சுமார் 600பேர் பலியாகியுள்ளனர். ரிக்டர் அளவில் 7.1 புள்ளியாகப் பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து நாசமாயின. இடிபாடுகளில் சிக்கி 400 மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல் வெளியானது. மேலும் 10000 பேர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் நிலநடுக்கத்தால் அதிகளவு கட்டடிடங்கள், வீடுகள் இடிந்து நாசமாயின. இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றன.
