சோயப் – சானியா மிர்சா திருமணம் நடைபெற்றது.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும் ஹைதராபாதில் இன்று திருமணம் நடைபெற்றது.
ஏப்ரல் 15-ந்தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய சானியாவின் செய்தித்தொடர்பாளர் ருச்சா நாயக் சானியா-சோயாப் இன்று நடை பெறுவதாகவும் பாதுகாப்புக் காரணங்களுக்காக திருமணம் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தையும் வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார்.

