தமிழகத்துக்கு கர்நாடக நிறுவனம் 150 மெகாவாட் மின்சாரம் வழங்கவுள்ளது
பெங்களூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெஎஸ்டபிள்யூ நிறுவனம் வரும் மே மாதம் 31 வரை தமிழ்நாட்டுக்கு 150 மெகாவாட் மின்சாரம் வழங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடகத்தில் உள்ள ஜெ.எஸ்.டபிள்யூ. மின் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு ஒப்பந்தம் செய்தது. இதன்படி அந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு மே மாதம் 31ம் தேதி வரை 300 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏப்ரல் 3ம் தேதி தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வழங்க கர்நாடக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

