தமிழ் நாடு -சில குறிப்புகள்
தமிழ் நாடு பல சிறந்த சுற்றுலா தளங்களை உள்ளடக்கியது. தமிழ் நாட்டில் ஏறக்குறைய 30000 கோவில்கள் உள்ளன. தமிழகத்துக்கு சுற்றுலா வர விரும்பும் பயணிகள் நவம்பர் முதல் மார்ச் வரையிலான நாட்களை தேர்வு செய்வதே சிறந்தது.ஏனெனில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள் தமிழ்நாட்டின் வட கிழக்கு பருவ மழைக்காலங்கள் ஆகும்.
தமிழ் நாட்டின் பரப்பளவு :- 130,058 சதுர கி.மீ
தலை நகரம் :-சென்னை
மொழிகள் :- தமிழ்.தெலுங்கு,கன்னடம்
விமான தளங்கள் :-சென்னை,கோவை,மதுரை,திருச்சி
தமிழ்நாட்டின் எல்லைகளாக கர்நாடக மாநிலமும் ஆந்திர மாநிலமும் மேற்கே கேரள மாநிலமும் அமைந்தள்ளன. தமிழ் நாட்டில் புராதன கோவில்கள்,சிற்ப கலையை பறை சாற்றும் மண்டபங்கள் கடற்கரைகள், சரணாலயங்கள், சினிமா அரங்குகள் ,பூங்காக்கள் என சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகளின் நினைவுகளில் நீங்காத இடம் பிடித்த கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களும் காண்பதற்கு இனியவை.


