திருமணத்திற்கு பின்பு ரம்பா நடிப்பாரா?
வருகிற 8ம்தேதி தொழிலதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்யவிருக்கிறார் ரம்பா. திருப்பதியில் திருமணத்தை முடித்ததும் 11ம்தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.திருமணத்தை முன்னிட்டு நடிகை ரம்பா கடந்த 14 ஆண்டுகளாக தனக்கு ஆதரவு கொடுத்த பத்திரிகைகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு பேட்டி அளித்தார் . மேலும் அவர் கூறுகையில் திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கா? என்று கேட்டதற்கு, திருமணத்துக்கு பின் நடிப்பது அல்லது நடிக்காதது என் விருப்பத்திற்கு விட்டு விட்டார்கள். என் கணவர் சம்மதத்துடன் தொடர்ந்து நடிப்பேன், என்றார்.