துபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களின் மேல் முறையீட்டு மனு மே 19ல் விசாரணை
‘பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில், மரண தண்டனை பெற்ற 17 இந்தியர்கள் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, ஐக்கிய அரபு குடியரசின் மேல்முறையீட்டு கோர்ட், அடுத்த மாதம் 19ம் தேதி விசாரிக்க உள்ளது’ என, இந்திய தூதரகம் சார்பில் இவ்வழக்கை கையாளும் வக்கீல் தெரிவித்தார்.

