August 5, 2010 – 11:57 pm | Comments Off

சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் …

Read the full story »
அறிவியல் அறிவோம்

Science facts -அறிவியல் உண்மைகள்

இந்தியா

National News – இந்திய செய்திகள்

உலகம்

World News – உலக-செய்திகள்

கட்டுரைகள்

Articles கட்டுரைகள்

கவிதைகள்

Poems-கவிதைகள்

Home » வர்த்தகம்

தொடர் சரிவில் பங்குச் சந்தை

Submitted by admin on April 20, 2010 – 12:00 amNo Comment

பங்குச் சந்தை, வாரத்தின் முதல் நாளான திங்களன்று சரிவைச் சந்தித்தது. ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை செவ்வாய்க்கிழமை அறிவிக்க உள்ளது. இதனாலேயே கடந்த வாரம் முதலே பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வந்தது. இதே நிலை திங்களன்றும் தொடர்ந்ததால் 190 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 17,400 புள்ளிகளாகச் சரிந்தது.

தேசிய பங்குச்சந்தையில் 59 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 5,203 புள்ளிகளாகக் குறைந்தது. முக்கியமான நிறுவனங்கள் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
உலோக நிறுவனங்களும் சரிவடைந்தன. டிஎல்எப் நிறுவனப் பங்கு விலை மிக அதிகபட்சமாக 4.15 சதவீதம் சரிந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. பின்னர் நிலைமை சிறிதளவு சீரடையத் தொடங்கியது. பிற்பகலில் சில நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து பெருமளவு சரிவு தவிர்க்கப்பட்டது.

Comments are closed.