நடிகை சுஹாஸினி மீதான வழக்குகள் ரத்து
நடிகை குஷ்பூவிற்கு ஆதரவாக பேசிய நடிகை சுஹாசினி மீது பல்வேறு தரப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று குஷ்பு பத்திரிக்கை ஒன்றில் கூறியிருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நேரத்தில், குஷ்வுக்கு ஆதரவாக நடிகை சுஹாஸினி ஒரு நிகழ்ச்சியில் ஆவோசமாகப் பேசினார்.
இதனல் சுஹாசினி மீதும் பல்வேறு தரப்பின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதைத் தொடர்ந்து சுஹாசினி மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
