நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ரூ 25 லட்சம் அபராதம்.
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ்யில் ரன், சண்டைகோழி m
மீண்டும் சர்ச்சையில் சிக்கி, நீதிமன்ற தண்டனைக்கும் உள்ளாகியுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின்.
கேரளாவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் ஆண்டுதோறும் நட்சத்திர கலைவிழா நடத்தி வருகிறது. மலையாள நடிகர்- நடிகைகளுக்கு பெரும் தொகை கொடுத்து கலை விழாவில் கலந்து கொள்ளச் செய்வது அவர்கள் வழக்கம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த நிறுவனத்தின் கலைவிழாவுக்காக
மீரா ஜாஸ்மினை அழைக்கபட்டார். இதற்காக அவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அட்வான்ஸ் தரப்பட்டது. எதிர்பாரா விதமாக அந்த விழாவில் மீரா ஜாஸ்மின் கலந்து கொள்ளவில்லை. அட்வான்ஸ் தொகையையும் திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து ஜவுளி நிறுவனம் மீராஜாஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
ஜவுளி நிறுவனத்துக்கு மீராஜாஸ்மின் ரூ.25 லட்சம் அபராதமும், ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
