நடுரோட்டில் மயங்கி விழுந்தார் சோனா
நடிகை சோனா பெங்களூரு – மைசூரு சாலையில் மயங்கி விழுந்தார். பத்து பத்து படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சோனா. தற்போது சொந்த படத் தயாரிப்பில் 2010 பாக்யராஜ் என்ற படத்தை எடுத்து வருகிறார். படப்பிடிப்பிற்கான லொகேஷன் பார்ப்பதற்காக தனது உதவியாளர்களுடன் பெங்களூருவில் முகாமிட்டிருந்த சோனா, அங்கிருந்து மைசூரு புறப்பட்டார். காரில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கியிருக்கிறார் சோனா. அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
சாலையில் மயங்கி விழுந்ததால் தலையிலும், கால்களிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனாலும் அவர் ஏன் காரை நிறுத்தச் சொன்னார், எதற்காக மயங்கி விழுந்தார் என்ற விவரம் தெரியவில்லை.
