பண வீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி அதிகரிப்பு
அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியாகும் ஆண்டு கடன் கொள்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்க அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடன் கொள்கைகளை வகுக்க முடிவு செய்துள்ளது. அதேசமயம் பொருளாதார வளர்ச்சியை பாதிக்காத வகையில் இது இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு வழங்கியுள்ளது.
எனவே வட்டி உயர்வு அதிகமாக இருக்காது என்றே நம்பப்படுகிறது.
