பாகிஸ்தானில் யுஎஸ் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள பெஷாவர் நகரில் அமெரிக்கத் தூதரகம் மீது தீவிரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர். எனினும், அவர்களின் தூதரக தகர்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஏராளமான ஆயுதங்களை பதுக்கியபடி இரு கார்களில் வந்த தீவிரவாதிகள் தூதரகம் அருகே உள்ள இரு சோதனைச் சாவடிகள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். தூதரகம் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் அதன் வெளிச்சுற்றுச் சுவர் சேதம் அடைந்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.
