பெங்களூர் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் வென்றது.
நாகபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, முதலில் டெக்கான் அணியை பேட் செய்ய அழைத்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி
அடைந்தது. இந்த வெற்றி மூலம் டெக்கான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுவரை 12 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
அடுத்து வரும் 2ஆட்டங்களில் வென்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.ஆனால், தற்போது அரையிறுதிக்குள் நுழைய,பெங்களூர் அணியும் இனி விளையாடும் 2 ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

