மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்: பாகிஸ்தானிடம் ஒபாமா வலியுறுத்தல்
மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்றி உரிய தண்டனை கிடைக்கச் செய்யுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானியிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்வதால் இந்திய- பாகிஸ்தான் இடையே உறவு மேம்பட அது உதவும் என்பதை ஒபாமா கூறியதாக தெரிகிறது. அதேநேரத்தில் பாகிஸ்தான் வசம்உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கையில் சிக்கிவிடாமல் சிறப்பு பாதுகாப்பு அளிக்குமாறு கிலானியிடம் ஒபாமா கேட்டுக் கொண்டாராம். அணு ஆயுதங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஒபாமாவிடம் கிலானி விளக்கியதாகத் தெரிகிறது.
