மும்பை தாக்குதலில் பயங்கரவாதி தாவூத் இப்ராகிமிற்கு தொடர்பு

அமெரிக்க ராணுவ போர் பயிற்சிக் கல்வி நிறுவனம், மும்பை தாக்குதலில் லஷ்கர் -இ- தொய்பாவின் தொடர்பு குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் இந்தியாவிலிருந்து தப்பி துபாய் சென்றதாகவும், அங்கிருந்து பாகிஸ்தானின் கராச்சியில் நிரந்தரமாக தங்கியிருப்பதாகவும் ஆதாரத்துடன் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
தாவூத்தின் தம்பி அனீஸ் இப்ராகிம், கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் கப்பல் தொழிலில் முதலீடு செய்து அதன் மூலம் கடத்தல் தொடர்ந்து நடக்க வழி வகை செய்துள்ளான் .மொம்பாசாவின் பெரிய தொழிலதிபர்களுடன் தாவூத்துக்குத் தொடர்பு உள்ளது.
இந்தத் தகவல்கள் அல்-குவைதாவுடன் தாவூத்திற்கு இருக்கும் நெருக்கத்தைக் காட்டுகின்றன. அதேநேரம் ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சவுதியில் தாவூத் தனது டி-கம்பெனியை நிறுவியதன் மூலம், அதை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இதனால், காஷ்மீர் விவகாரத்தில் சவுதியின் பங்கும் இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

