This option will reset the home page of this site. Restoring any closed widgets or categories.

Reset

உலகம்

சீனாவில் வேர்ல்டு எக்ஸ்போ 2010 பிரமாண்ட துவக்கம்!

ஷாங்காய்: உலகின் பல நாடுகளிலிருந்தும் பல கோடி மக்கள் குவியும் வேர்ல்டு எக்ஸ்போ 2010 வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த கண்காட்சிக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சர்வதேச கண்காட்சி உலகின் மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்று, வேர்ல்டு எக்ஸ்போ துவக்க விழாவில் பங்கேற்ற சீன அதிபர் ஹூ ஜிண்டாவ்... (Continue reading)

எரிமலை குமுறிக் கொண்டிருக்கும் ஐஸ்லாந்தில் பூகம்பம்

ஐஸ்லாந்தில் எரிமலை குமுறிக் கொண்டிருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஐஸ்லாந்தின் அய்ஜாப்ஜல்லாஜோகல் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து பெரும் சாம்பலைக் கக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஐரோப்பிய வான்வெளியின் பெரும் பகுதியில் சாம்பல் மண்டலம் சூழ்ந்திருப்பதால் விமானப் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எரிமலை உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.... (Continue reading)

கிர்கிஸ்தான் அதிபர் ராஜினாமா

கிர்கிஸ்தான் அதிபர் குர்மான்பெர்க் பாகியேவ், நாட்டைவிட்டுத் தப்பியோடினார். 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இவர் அளவுக்கு அதிகமாக ஊழல் செய்து சொத்துக்களை வாங்கி குவித்தார், நிர்வாகத்தில் இறின் கவனம் செலுத்தாமல் இருந்ததால், எதிர்க்கட்சிக்காரர்களும் மக்களும் அதிபர் மீது வெறுப்பில் இருந்தனர். நேற்று முன்தினம் அந்த வெறுப்பு கலவரமாக மாறியது. அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். அங்குள்ள... (Continue reading)

சீனாவில் நிலநடுக்கம் சுமார் 600 பேர் பலி

வியாழன், 14 ஏப்ரல் – சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கியுங்காய் மாகாணத்தில் பகுதியில் பயங்கர ‌நிலநடுக்கத்திற்கு சுமார் 600பேர் பலியாகியுள்ளனர். ரிக்டர் அளவில் 7.1 புள்ளியாகப் பதிவாகி இருந்தது. இந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் கட்டிடங்கள், ‌வீடுகள் இடிந்து நாசமாயின. இடிபாடுகளில் சிக்கி 400 மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல் வெளியானது. மேலும் 10000 பேர்... (Continue reading)

மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்: பாகிஸ்தானிடம் ஒபாமா வலியுறுத்தல்

மும்பையில்  தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்: பாகிஸ்தானிடம் ஒபாமா வலியுறுத்தல்

மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்றி உரிய தண்டனை கிடைக்கச் செய்யுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானியிடம் அமெரிக்க அதிபர்  ஒபாமா வலியுறுத்தினார். அவ்வாறு செய்வதால்  இந்திய- பாகிஸ்தான் இடையே உறவு மேம்பட அது  உதவும்  என்பதை ஒபாமா கூறியதாக தெரிகிறது. அதேநேரத்தில் பாகிஸ்தான் வசம்உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கையில் சிக்கிவிடாமல் சிறப்பு பாதுகாப்பு அளிக்குமாறு கிலானியிடம் ஒபாமா... (Continue reading)

போலந்து அதிபர் பலி – பைலட் தான் காரணம்

போலந்து அதிபர் லெக் கெச்சின்சிகி விமான விபத்தில் பலியானதால், அந்நாட்டில் ஒரு வார காலம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. விமான விபத்திற்கு பைலட் தவறே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும்,முக்கிய தகவல்களை உள்ளடக்கிய கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.போலந்து அதிபர் லெக் கெச்சின்சிகி(60), தனது மனைவி மரியா மற்றும் ராணுவ தளபதி,மத்திய வங்கி தலைவர்,போலந்து அரசின் முக்கிய... (Continue reading)

துபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களின் மேல் முறையீட்டு மனு மே 19ல் விசாரணை

‘பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில், மரண தண்டனை பெற்ற 17 இந்தியர்கள் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, ஐக்கிய அரபு குடியரசின் மேல்முறையீட்டு கோர்ட், அடுத்த மாதம் 19ம் தேதி விசாரிக்க உள்ளது’ என, இந்திய தூதரகம் சார்பில் இவ்வழக்கை கையாளும் வக்கீல் தெரிவித்தார். ... (Continue reading)

மும்பை தாக்குதலில் பயங்கரவாதி தாவூத் இப்ராகிமிற்கு தொடர்பு

மும்பை தாக்குதலில் பயங்கரவாதி தாவூத் இப்ராகிமிற்கு தொடர்பு

அமெரிக்க ராணுவ போர் பயிற்சிக் கல்வி நிறுவனம், மும்பை தாக்குதலில் லஷ்கர் -இ- தொய்பாவின் தொடர்பு குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் இந்தியாவிலிருந்து தப்பி துபாய் சென்றதாகவும், அங்கிருந்து பாகிஸ்தானின் கராச்சியில் நிரந்தரமாக தங்கியிருப்பதாகவும் ஆதாரத்துடன் அந்த அறிக்கையில்... (Continue reading)

பாகிஸ்தானில் யுஎஸ் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள பெஷாவர் நகரில் அமெரிக்கத் தூதரகம் மீது தீவிரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர். எனினும், அவர்களின் தூதரக தகர்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்களை பதுக்கியபடி இரு கார்களில் வந்த தீவிரவாதிகள் தூதரகம் அருகே உள்ள இரு சோதனைச்... (Continue reading)