Articles in பொழுதுபோக்கு
சோதனைகள்
இல்லாத வாழ்க்கையை
இறைவனிடம் வேண்டாதீர்.
சோதனைகள்
கசப்பானவை தான்.
ஆனால்
அவை இல்லாத வாழ்க்கையில்
சுவை இருப்பதில்லை.
சோதனைகளை
தாங்கும் வலிமையை
மட்டுமே இறைவனிடம்
வேண்டுங்கள்………..
இறைவனிடம்
“தாயை ஏன் படைத்தாய்? “
என்று கேட்டேன்..
இறைவன் சொன்னார்
“நான் ஒவ்வொருவருடனும்
இருக்க முடியாதே!
ஆதலால் தான்
தாயைப் படைத்தேன்” என்றார்.
“ உடன் பிறந்தோரை
ஏன் படைத்தாய்? “
என்று கேட்டேன்..
தனிமை சோகம்
வேண்டாம் என்றே
படைத்தேன் என்றார்.
“இத்தனையும்
படைத்த இறைவா!
காதலையும்
ஏன் படைத்தாய்?”
என்று கேட்டேன்..
“தவணை முறையில்
மரணத்தை பழக்கவே” என்றார்….
கமலா :- உன் புருஷன் எப்ப சாப்பிட்டாலும் சாப்பாட்டை புகழ்ந்துகிட்டே சாப்பிடுகிறாரே ஏன் ?
விமலா :- எங்க வீட்டுல என் வீட்டுக்காரர் தான சமையல் செய்யறாரு
கனல் இருப்பதால் தான்
கதிரவனுக்கே மதிப்பு!.
மணம் இருப்பதால் தான்
மலர்களுக்கே மதிப்பு!.
நிலவு இருப்பதால் தான்
இரவுக்கே மதிப்பு!.
போராடும்குணம் இருப்பதால் தான்
மனிதா உனக்கும் மதிப்பு!!!!!!.
தாத்தா – தாத்தா இனிமே கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்.
பேரன் – அப்ப நீ படிச்சா கிடைக்காதா?
அப்பா – படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்க?
மகன் -புக் -கை மூடி வச்சிரலாம்னு இருக்கேன் …….
வழிகள் தெரியாமல்
என் விழிகள் கலங்கும் போதெல்லாம்
அவள் மொழிகள் தான்
எனக்கு வழி
காட்டும் கலங்கரை விளக்கங்கள்….
சோதனையின் வேதனையில்
நான் அழும்போதெல்லாம்
கைக்குட்டையாய் இருக்கும்
