தமிழ்நாடு செய்திகள் - News in Tamil

ஜனாதிபதி வேட்பாளர்: முகர்ஜிக்கு ஆதரவு – திமுக
குடியரசுத் தலைவர் வேட்பாளராக தற்போது நிதி அமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் நிறுத்துமேயானால், பிரணாப் முகர்ஜிக்கு எங்கள் ஆதரவை அளிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று (மே 5) செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

முகர்ஜிக்கு ஆதரவு:

தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த குழு உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளதே,  புதிய அணை கட்ட வேண்டிய அவசியமில்லை என்றெல்லாம் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதே, அதுபற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்: அந்த கருத்தைத் தானே நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

கேள்வி: இந்த முடிவினை தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று நினைக்கிறீர்களா?

பதில்: இதிலே தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் போர் ஒன்றும் நடக்கவில்லை. அதனால் வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லை. தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே இருந்த உரிமையை பாதுகாக்கிறோம். அவ்வளவுதான்.

கேள்வி: குடியரசு தலைவராக நல்லவர் ஒருவர் வரவேண்டும் என்று எண்ணுகிறீர்கள். அந்த நல்லவராக பிரணாப் முகர்ஜி அமைந்தால் அதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா?

பதில்: எனக்கொன்றும் ஆட்சேபனை கிடையாது. குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையே.

கேள்வி: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி என்று அறிவிக்கப்பட்டால் உங்கள் நிலை?

பதில்: பிரணாப் முகர்ஜியை 1969-ம் ஆண்டிலேயே சென்னைக்கு அழைத்து வந்து மாநில சுயாட்சி மாநாடு நடத்தியவன் நான்.

கேள்வி: அதனால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: அவர்தான் வேட்பாளர் என்றால் தி.மு.க. அதை ஆதரிக்கத் தயங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

முல்லைப் பெரியாறு : மாற்று யோசனைகளை பரிசீலிக்க கூடாது- வைகோ அறிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் 2010 பிப்ரவரி மாதம் அமைத்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐந்து உறுப்பினர் உயர்மட்டக் குழு, அணையின் வலு குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, உச்சநீதி மன்றத்தில் வழங்கிய 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பென்னி குயிக் கட்டிய அணை வலுவாகவே இருக்கின்றது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது.

நில அதிர்வுகளால் அணைக்கு எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. இனியும் அத்தகைய அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு வலுவாக உள்ளது. கட்டுமானத் தொழில்நுட்ப அடிப்படையிலும் வலுவாக இருக்கிறது. எனவே தண்ணீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது. மேலும் 1979 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நீர்மட்ட அளவுக்கு அதாவது 152 உயரத்துக்கும் உயர்த்திக் கொள்வதற்கும், வல்லுநர் குழு அய்வு அறிக்கையைப் பெற்றுச் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளது.

இந்த ஐவர் குழு அணையை ஆய்வு செய்வதற்கு எட்டு தனித்தனிக் குழுக்களை அமைத்தது. அந்தக் குழுக்கள் 13 அறிக்கைகளை தாக்கல் செய்தன. அந்த அடிப்படையில்தான் இப்போது உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்து உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், இந்திய இறையாண்மைக்கும் எதிராக கேரளம் நிறைவேற்றிய சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, அதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்குதான், இப்போது நிலுவையில் இருக்கின்றது.

அணை வலுவாக இருக்கிறது என்று ஐவர் குழு அறிவித்து விட்டதால், புதிய அணை கட்டுவது குறித்த பேச்சுக்கே இடம் இல்லை. மாற்று யோசனைகள் எதையும் பரிசீலிக்க வேண்டிய தேவையும் இல்லை. 7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும், முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற ஐவர் குழு அறிக்கை அளித்ததற்குப் பின்னர், இரு மாநில அரசுகளும் இதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வஞ்சமான ஒரு கோரிக்கையை முன்வைத்து உள்ளது. தமிழக அரசு வழக்கறிஞர் அதை ஆணித்தரமாக நிராகரித்து உள்ளார்.

புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் திட்டக்குழுவோ, சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகமோ அனுமதி கொடுக்கக் கூடாது. தென் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கடந்த ஆண்டு தமிழகத்தின் கோடானகோடி மக்கள் போராடினார்கள். மூன்று தமிழர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். கேரள மாநில மக்களுக்கு அரிசி, பருப்பு, பால், காய்கறி, பழம், ஆற்று மணல், அனைத்தையும் தமிழ்நாடுதான் அனுப்பி வைக்கின்றது. இனியாவது கேரள அரசியல் கட்சிகளுடைய அநீதியான யோசனைகளையும், திட்டங்களையும் கேரள மக்கள் புறந்தள்ள வேண்டும்.

அணைக்கு ஆபத்து இல்லை. எந்த தீங்கும் நேராது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஆதீன மடத்தில் வருமான வரித்துறை சோதனை
சைவசித்தாந்த கொள்கைகளை பரப்புவதற்காக சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு திருஞான சம்பந்தரால் துவக்கி வைக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் தற்போதைய ஆதீனமாக ஸ்ரீஅருணகிரிநாதர் உள்ளார். இவர் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை கடந்த வாரம் நியமித்தார்.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ள நிலையில், மதுரை ஆதீனத்தின் சொத்துக்கள் குறித்து அரசுக்கும் ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.

திருஞான சம்பந்தரால் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஆதீனம் மடம் தோற்றுவிக்கப்பட்டது. சைவ சித்தாந்த கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த ஆதீனம் பாரம்பரிய சிறப்புக் கொண்டது.

மதுரை, விருதுநகர், திருச்சி, திருவாரூர், சிவகங்கை உள்பட பல ஊர்களில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ள மதுரை ஆதீனத்தின் தற்போதைய 292-வது ஆதீனமாக ஸ்ரீஅருணகிரிநாத ஞானசம் பந்த தேசிக பரம்மாச்சார்யா உள்ளார். இவர் கடந்த வாரம் மதுரை ஆதீனத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தாவுக்கு முடி சூட்டினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நித்யானந்தா நியமனத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. நித்யானந்தாவுக்கு எதிராக சென்னை, மதுரை கோர்ட்டுக்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. நித்யானந்தா ஆபாச சி.டி. புகாரில் சிக்கியவர் என்பதால், அவரை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக தொடர விடக்கூடாது என்பதில் மற்ற ஆதீன தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

மதுரை ஆதீனத்தின் பாரம்பரிய பெருமையை காக்க வேண்டுமானால், அந்த ஆதீனத்தை அரசே ஏற்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மதுரை ஆதீனத்தின் கோடிக்கணக்கான சொத்துக்களை நித்யானந்தா நிர்வகிக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் தொடர்பாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்த நிலையில்தான், மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீனத்தில் மதுரை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணியளவில் வருமான வரி சோதனை நடத்த உள்ளே நுழைந்தனர்.

5 அதிகாரிகளைக் கொண்ட குழு வந்த போது மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஆதீனத்தில் இருந்தார். நித்யானந்தா பெங்களுரூ சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என்று அருணகிரி நாதர் அதிகாரிகளுக்கு கூறினார்.

மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டபோது, அவருக்கு தங்க க்ரீடம் அணிவிக்கப்பட்டு, தங்க செங்கோல் அளிக்கப்பட்டது. அதேப்போன்ற க்ரீடம் மற்றும் செங்கோல் அருணகிரி நாதரிடமும் இருந்தது. விழாவின் போது இரண்டு ஆதீனங்களும் ஏராளமான நகைகளை அணிந்திருந்தனர். இவற்றைப் பார்த்த வருமான வரித் துறையினர், இவற்றுக்கு முறையாக வருமான வரி செலுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தில்தான் இந்த சோதனையை நடத்தியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

மேலும்,  மதுரை ஆதீனத்தில் ஏராளமான பணம் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிகிறது. பணத்துக்கும், நகைகளுக்கும்  உரிய வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மணி முதல் மதியம் வரை சோதனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

நகைகள் தவிர ஆதீனத்தில் பல கோடி பணம் கையிருப்பு உள்ளது. அந்த பணத்துக்கு முறையாக கணக்கு உள்ளதா? என்றும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இது தவிர ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றுக்கு மதுரை ஆதீனம் சார்பில் முறைப்படி வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது? என்று கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் : மாநிலங்களின் உரிமை பாதிக்காது – பிரதமர்
தில்லியில் இன்று (மே 5) தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பான மாநில முதலமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசி தனது கருத்துக்களை எடுத்து கூறினார். குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன்பட் நாயக் ஆகியோரும் பேசினார்கள்.

முன்னதாக மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து பேசியதாவது:-

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரம், உரிமை பாதிக்கப்படாது. தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்த இது உதவும். மத்திய- மாநில அரசுகளிடையே எந்த மோதலையும் ஏற்படுத்தாது. தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும். தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும். நமது தேசிய பாதுகாப்புக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

தீவிரவாதத்தை ஒழிப்பதில் மாநில அரசுகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. எனவே தேசிய அளவிலும், மாநில அளவிலும் அதை செயல்படுத்த வேண்டும். இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான பிரச்சினை அல்ல. தீவிரவாதத்துக்கு எதிராக நாம் இணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

நாடு முழுவதும் உளவு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிரவாத தடுப்பு மையமானது நாம் இணைந்து செயலாற்றுவதற்காக பயணம் செய்யக்கூடிய வாகனமாக கருத வேணடும்.

கார்கில் போருக்கு பின் நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து இந்த மையம் ஆலோசனைகள், வழிமுறைகள் சொல்லும் மாநில அரசுகளை இது பலவீனப்படுத்தாது.

இந்த மையம் எப்படி செயல்படும் என்பதை உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் முறைப்படி தெரிவிக்கும். அதன் அதிகாரங்கள், செயல்பாடுகள், மத்திய, மாநில அரசுகள் இதில் எப்படி ஒருங்கிணைத்து செயல்படுவது என்பதும் முறைப்படுத்தப்படும்.

எனவே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் சீராகவும், திறம்படவும் செயல்பட வேண்டுமானால் மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பலப்படும். எனவே இதில் முதல்வர்களின் ஆலோசனைகளை மத்திய அரசு திறந்த மனதுடன் வரவேற்கிறது.

இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

என்சிடிசி தேவை – சிதம்பரம்
இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு செயல்படும் என்சிடிசி தேவை என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் இன்று (மே 5) நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில்  கூறியுள்ளார்.

மேலும், மாநில காவல்துறைக்கு பயங்கரவாதிகளைப் பற்றிய தகவல்கள் விரைவாக கிடைப்பதில்லை, பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைக்கு உடனடியாக பணிகளை மேற்கொள்ள என்சிடிசி உதவும். மும்பை தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் சிதம்பரம் கூறினார்.

தில்லி முதல்வர்கள் மாநாடு : ப சிதம்பரம் பேச்சு
தில்லியில் இன்று (மே 5) தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பான மாநில முதலமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் பேசியதாவது; தேசிய தீவிரவாத தடுப்பு மையமானது நமது புதிய பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கியமான தூண் ஆகும். நமது நாடு 7,516 கி.மீ. தூர கடற்கரையையும், 15,106 கி.மீ. சர்வதேச எல்லைகளையும் கொண்டுள்ளது. நம்மைச் சுற்றிலும் அண்டை நாடுகளாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பூடான், சீனா, வங்களதேசம், மியான்மர் ஆகிய 7 நாடுகள் உள்ளன. இதன் மூலம் நமது நாடு சர்வதேச முக்கிய வாயிலாக உள்ளது. தரை வழியாக மட்டுமல்லாது கடல் வழியாகவும், ஆகாயம் மற்றும் வான் வழியாகவும் நமக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சைபர் கிரைம்களை கண்டுபிடிக்கும் நமது உள் கட்டமைப்புகள் பொய்த்தோற்றம் கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் நிதி மோசடி, பொருளாதார குற்றம் உள்பட பலமுறை கேடுகள் நடைபெறுகின்றன. இவை தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை. வான்வழியாக நடைபெறும் சைபர் குற்றங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. சைபர் குற்றங்களும் எல்லை வரம்பு கிடையாது. வான்வழியாக நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ளது.

எனவே மத்திய- மாநில அரசுகள் அதில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு ப. சிதம்பரம் பேசினார்.

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை ஏற்க முடியாது. இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் என்றார்.

என்சிடிசி-யை நிறுத்தி வைக்க வேண்டும் – ஜெயலலிதா
புதுதில்லியில் நடந்து வரும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் (என்சிடிசி) அமைப்பது குறித்து மாநில முதலமைச்சர்களின் மாநாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

அப்போது, தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது இந்திய புலனாய்வுத் துறையின் செயலற்றத் தன்மையையேக் காட்டுகிறது. என்சிடிசி அமைப்பது குறித்த முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார்.

மேலும், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த உத்தரவின் நகலைக் கூட உள்துறை அமைச்சகம் தமிழகத்திற்கு இதுவரை அனுப்பவில்லை. உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கிறது என்று ப. சிதம்பரத்தின் மீது ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

குரூப் 4 தேர்வு: நிரந்தரப் பதிவு அவசியமில்லை
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பு நிரந்தரப் பதிவு அவசியமில்லை, அந்தப் பதிவு இல்லாமலேயே நேரடியாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, தேர்வாணையத்தில் ஏற்கெனவே நிரந்தரப் பதிவினை பெற்று இருப்பது அவசியம். நிரந்தரப் பதிவின் மூலம் பெறப்பட்ட அடையாள எண் மற்றும் கடவுச் சொல் ஆகியன ஐந்தாண்டு காலத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் மனு செய்து வருகின்றனர். அவர்கள் நிரந்தரப் பதிவை மேற்கொண்டு, அதன்பின் தேர்வுக்கும் விண்ணப்பிப்பது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தால் எளிய நடைமுறையை தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தேர்வாணையத்தின் செயலாளர் உதயசந்திரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அனைத்தும் நிரந்தரப் பதிவுக்கு மாற்றம் செய்யப்படும். எனவே, தேர்வுக்கு விண்ணப்பிப்போர் தனியாக நிரந்தரப் பதிவை மேற்கொள்ள வேண்டாம். குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பத்தினை இணையவழியில் பதிவு செய்தவுடன் கிடைத்திடும் பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லையே நிரந்தரப் பதிவுக்கான நிரந்தர அடையாள எண் மற்றும் கடவுச் சொல்லாக ஏற்றுக் கொள்ளப்படும். இது ஐந்தாண்டு காலத்துக்குச் செல்லும்.

நிரந்தரப் பதிவு முறையில் ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

ஏனெனில் நிரந்தரப் பதிவு முறையில் விண்ணப்பதாரர்களின் அடிப்படை விவரங்கள் மற்றும் புகைப்படம், கையொப்பம் ஆகியன மட்டுமே பெறப்படுகின்றன. ஒவ்வொரு தேர்வுக்கும் கல்வித் தகுதி, தொழில்நுட்ப கல்வித் தகுதி, வயது வரம்பு, பணி முன் அனுபவம், தேர்வு மையம் ஆகியன மாறுபடும். மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆகவே, நிரந்தரப் பதிவு, எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாகக் கருதப்பட மாட்டாது. எனவே, நிரந்தரப் பதிவெண்ணைக் கொண்டு விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வாணையச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வழக்கு எண் 18/9 – விமர்சனம்
பணம் என்னவெல்லாம் செய்யும், அந்த பணம் இல்லாத அப்பாவி கீழ் தட்டு மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், பள்ளி மாணவர்களுக்கு அவர்களது பெற்றொர்கள் கொடுக்கும் பணமும், செல்லமும் அவர்களை எப்படிப்பட விபரீத செயலில் ஈடுபட வைக்கிறது என்பதையும் சுத்தியலில் அடித்தாற்போல் ரொம்பவே அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இப்படம் சினிமா ரசிகர்களுக்கு வெறும் படமாக மட்டும் இன்றி ஒரு பாடமாகவும், அதே சமயம் பெற்றொர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமைந்திருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் மீது ஒருவன் ஆசிட் வீசிவிட, குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் விசாரணையை ஆரம்பிக்கிறது. யார் மீதாவாது சந்தேகம் இருக்கிறதா என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவிடம் கேட்க, அவர் தனது பெண்ணை ஒரு தலையாக காதலித்த தெரு வண்டிக்கடை உணவகத்தில் வேலை செய்யும் ஸ்ரீயை கைகாட்டுகிறார். ஸ்ரீயை அழைத்து போலீஸ் தனது விசாரனையை ஆரம்பிக்க, வாழ்க்கையில் ஒருவன் எந்த எந்த துண்பத்தையெல்லாம் அனுபவிக்க கூடாதோ, அப்படிபட்ட துன்பங்களையெல்லாம் அனுபவித்து, இறுதியில் சென்னை வண்டிகடை உணவகத்தில் வேலை செய்யும் ஸ்ரீயின் கதையை கேட்டு போலீஸே அனுதாபப்படுகிறது.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வேலைப் பார்த்த வீட்டு உரிமையாளரின் பெண்ணான பள்ளி மாணவி ஸ்ரீ யை விசாரித்த போலீஸிடம் “சார் இந்த பையனை விசாரித்தது போல மற்றொருவனையும் விசாரிக்கணும்” என்று சொல்கிறார். ஏன் அவனை விசாரிக்க வேண்டும் என்று போலீசாரின் கேள்விக்கு அந்த மாணவி தனது கதையை விவரிக்க ஆரம்பித்ததும் தொடர்கிறது மற்றொரு பகுதி. இந்த இரண்டு பகுதிகளையும் இணைத்து மிக நேர்த்த்தியான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் பணம் படைத்த மேல்தட்டு வர்க்கத்தினால் கீழ்தட்டு மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருப்பதுதான் க்ளைமாக்ஸ்.

இரண்டு கதைகளாக நகரும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக திரைக்கதை அமைந்திருக்கிறது. பத்திரிகைகளில் சாதரணாம படித்து விட்டு செல்லும் செய்திக்குப் பின்னால் எவ்வளவு பெரிய கதை இருக்கும் என்பதை மிக ஆழமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் நடித்த புதுமுகங்கள் அனைவருமே நடிப்பில் தங்களது திறமையை அபாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வண்டிகடை உணவகத்தில் வேலை செய்யும் வேலு கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீயின் தோற்றமும், அவருடைய நடிப்பும் அந்த கதாபாத்திரதை படம் முடிந்தும் நம் கண்ணை விட்ட அகலாமல் பார்த்துக்கொள்கிறது. வீட்டு வேலை செய்யும் ஜோதி கதாபாத்திரத்தில் நடித்த ஊர்மிளா மகந்தாவுக்கு வசனங்கள் இல்லை என்றாலும் அவருடைய கண்களே பெரும் அளவுக்கு நடித்திருக்கிறது. அதேபோல பள்ளி மாணவனாகவும், மாணவியாகவும் நடித்த நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தது போல நடித்திருக்கிறார்கள்.

போலீஸாக நடித்த குமாரவேலு அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். பள்ளி மாணவர்களை பிடித்து கண்டிப்பது, ஜோதியின் முகத்தில் ஆசிட் அடித்தவனை கண்டுபிடிப்பது என ரசிகர்களின் மனதில் நல்ல போலீஸாக இடம்பிடிக்கும் குமாரவேலு, இறுதியில் கெட்ட போலீசாக இடம்பிடிக்கிறார். சின்னசாமி கதாபாத்திரத்தில் நடித்த சிவனும் நம்மை கவனிக்க வைக்கிறான்.

உருத்தாத எந்தவித ஒளியையும் பயன்படுத்தாமல் அற்புதமான ஓளிப்பதிவை கொடுத்திருக்கிறார் விஜய் மில்டன். ஸ்டில் கேமராவில் படமாக்கப்பட்ட படமாம் இது. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அமைதியான, அழகான மெட்டுக்களைப் போட்டிருக்கும் அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னா, பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு ரசிகர்களுக்கு எந்த வித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல், இரண்டு பகுதிகளாக நகரும் காட்சிகளை துள்ளியமாக வெட்டியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கும் இப்படம், தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும் படமாக அமையும். அந்த அளவுக்கு ரசிகர்களின் அடிமனதில் பதியும் அளவுக்கு இப்படத்தை செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

குடுபத்தோடு பார்க்க வேண்டிய இப்படம் வழக்காக இல்லாமல் ரசிக்களுக்கு ஒரு பாடமாகவும் அமையும்.

வேலூரில் 108 டிகிரி வெயில்
கத்திரி வெயிலின் தொடக்க நாளான நேற்று (மே 4) அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி வெயில் பதிவானது.

சென்னை, திருச்சி, புதுச்சேரி, கடலூர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் வெயிலின் அளவு அதிகமாக இருந்தது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அனல்காற்று கடுமையாக வீசியதால் சாலைகளில் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. வெயிலின் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக சாலையோரக் கடைகளில் குளிர்பானங்கள், இளநீர், கரும்புச்சாறு ஆகியவற்றை பொதுமக்கள் விரும்பி பருகினர்.

இம்மாதம் 28 -ம் தேதி வரை கத்திரி வெயில் உள்ளதால் நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் இடி, மின்னலுடன் மேகம் உருவாகலாம்.

வெப்பநிலை 104 டிகிரியையொட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.