இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் (ஏப்.18) ஏற்ற நிலையே தொடர்கிறது. ரிசர்வ் வங்கி நேற்று (ஏப்.17) வெளியிட்ட குறைந்த கால கடனுக்கான வட்டிவிகித குறைப்பு அறிவிப்பின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் ஏற்ற நிலையே தொடர்கிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 138.41 புள்ளிகள் உயர்ந்து 17,496.35 புள்ளிகளாகவும், நிப்டி 39.80 புள்ளிகள் .யர்ந்து 5,329.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாயின.
உலகவங்கி தலைவராக ஜிம்யோங்கிம் தேர்வு
அமெரிக்கவாழ் தென்கொரியாவைச் சேர்ந்த ஜிம்-யோங்-கிம் உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜுலை மாதம் பதவியேற்க உள்ளார். உலகவங்கியின் தலைவராக உள்ள ரூபர்ட் ஜிலோயிக் பதவி காலம் வரும் ஜுலை மாதம் நிறைவு பெறுகிறது. புதிய தலைவரை உலகவங்கி தலைமை நிர்வாகம் அறிவித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்கவாழ் தென்கொரியாவைச் சேர்ந்த ஜிம்-யோங்-கிம்மை பரிந்துரை செய்தார். அதன்படி உலகவங்கி இவரை புதிய தலைவராக நேற்று அறிவித்தது. தென்கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்த [...]
வாட் வரி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இன்று கடையடைப்பு
வாட் வரி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இன்று (ஏப்.17) கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. வாட் வரி உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும்,அதனை திரும்ப பெறக்கோரியும், இன்று பல்வேறு வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் 4000-த்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இதில் ஹோட்டல்கள், பேக்கரி கடைகள் ,காபி பார்கள் உள்ளிட்டவைகள் அடங்கும். புதுச்சேரியில் நேரு வீதி, காந்திவீதி, அண்ணாசாலை உள்ளிசுட்ட முக்கிய வீதிகளில் உள்ள கடைவியாபாரிகள் பங்கேற்கின்றனர்.
அதிக வரி செலுத்தியவர்கள் பட்டியலில் ஷாருக், சல்மான் முன்னிலை
கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் (2011-12) பாலிவுட் நடிகர்கள் பலர் அதிக அளவில் வருமான வரி செலுத்தியுள்ளனர். இவர்களில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் தலா ரூ.15 கோடி வரி செலுத்தி முன்னிலையில் உள்ளனர். ஷாருக் கான் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவீதம் குறைவாக வரி கட்டி இருக்கிறார். அதே சமயத்தில் சல்மான் கான் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதல் [...]
பெட்ரோல் விலையை ரூ.8 உயர்த்த எண்ணெய் நிறுவனம் வலியுறுத்தல்
புதுடெல்லி,ஏப் 14 , கமிஷன் தொகையை அதிகரிக்க வலியுறுத்தி வருகிற 23-ம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளை மூடப்போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஒருபுறம் அறிவித்துள்ள நிலையில்,பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 8 வரை உயர்த்த வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) தலைவர் ஆர்.எஸ். புடோலா அரசை வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு ரூ.50 கோடி இழப்பைச் சந்தித்து வருவதால் இந்த விலை உயர்வு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த [...]
பாகிஸ்தான் வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி
புதுடெல்லி,ஏப்.13, கார்கில் போருக்கு பின் இந்தியா- பாகிஸ்தான் இடையே பொருளாதாரத்தில் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்திய பொருளாதாரச் சந்தை தொடர்ந்து வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில், கடந்த வெள்ளியன்று பாகிஸ்தான் நிறுவனங்கள் இந்திய சந்தையில் கால் பதிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா பாகிஸ்தான் வர்த்தகதுறை அமைச்சர் மக்தூம் அமின் பாஹீமுடன் [...]
யாஹு நிறுவனம் 2000 பணியாட்களை நீக்க முடிவு
கலிபோர்னியா, ஏப்.7, யாஹு நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள ஸ்காட் தாம்ஸன் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், கூகுள், பேஸ்புக் போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் யாஜு நிறுவனத்துக்கு பல மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டதாக ஸ்காட் தெரிவித்தார். எனவே பணியாட்களை குறைப்பதன் மூலம் சிக்கன நடவடிக்கைகளை ஸ்காட் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு கடந்த 2011ல் யாஹுவில் 14 ஆயிரம் [...]
பிரான்ஸ் – இஸ்ரோ ரூ.100 கோடியில் ஒப்பந்தம்
ரூ.100 கோடியில் பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோளினை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் ரிமோட்சென்ஸிங் செயற்கை கோளான ஸ்பாட்-6 என்ற 800 கி.கி எடை கொண்ட செயற்கைக் கோளினை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக பிரான்ஸ்நாட்டின் ஆஸ்ட்ரிம்-எஸ்.ஏ.எஸ் என்ற நிறுவனத்துடன் கடந்த 2008-ம் ஆண்டு ரூ. 100 கோடியில் ஒப்பந்தம் [...]
ஏப்.7ம் தேதி முழுநேர வங்கி சேவை – மத்திய அரசு
ஏப்ரல் 7ம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் நாள் முழுவதும் செயல்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாவீரர் ஜெயந்தி, புனிதவெள்ளி உள்ளிட்ட காரணங்களால் 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏப்ரல் 7ம் தேதி முழுநேரமும் வங்கிகள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டுமே வங்கி சேவைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






2762.00