சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிப்பதற்கு மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனையை விதித்துள்ளனர். மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்து மேனனை மீட்பது தொடர்பாக நேற்று (ஏப்.27) நடந்த பேச்சுக்களில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து அவரை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. மாவோயிஸ்டுகள் நியமித்த பிரதிநிதிகளுடன் அரசு தரப்பினர் நேற்று (ஏப்.27) நடத்திய இரண்டாவது சுற்றுப் பேச்சுகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சிறையில் இருக்கும் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேரை [...]
மக்களவையில் அமளி : காங்., எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட்
அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.பி.,க்கள் 8 பேர் மக்களவையில் இருந்து 4 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தனி தெலுங்கானா விவகாரத்தை முன் வைத்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மீராகுமார் தெரிவித்துள்ளார். நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆந்திர பிரதேசத்தின் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள். டி.ஆர்.எஸ்., எம்.பி.,கள் 4 பேரையும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜுடன், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசித்தார். இதில் முலாயம் சிங், சரத் யாதவ், குருதாஸ் [...]
பிகாரிலிருந்து 9 பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்
விசா விதிமுறைகளை மீறிய 9 பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் பிகாரில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அந்த மாநில டிஜிபி அபயானந்த் தெரிவித்தார். பாரத் சம்வத் யாத்ராவில் பங்கேற்க இந்தியா வந்த அவர்கள், நக்ஸலைட்டுகளுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் சில சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து தில்லியில் உள்ள அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அவர்களை வெளியேற்ற பிகார் போலீஸ் முடிவுசெய்தது என டிஜிபி தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா நீதிமன்றத்தில் ஆஜர்
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இன்று (ஏப்.23) ஆஜரானார்கள். இதையடுத்து சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னதாக சசிகலா இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னா ஹஸாரே குழுவிலிருந்து கஸ்மி நீக்கம்
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவில் இருந்து முக்கிய முஸ்லிம் தலைவரான முஃப்தி ஷமீம் கஸ்மி நேற்று (ஏப்.22) நீக்கப்பட்டார். குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாக அவர்மீது அன்னா குழுவினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் கஸ்மி, அன்னா ஹசாரே குழு முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பாக மாறிவிட்டதாகவும், தாமே அந்தக் குழுவில் இருந்து விலகி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அன்னா ஹசாரே குழுவின் உயர்நிலைக் கூட்டம் அன்னா ஹஸாரே தலைமையில் [...]
அப்துல் கலாம் மீண்டும் குடியரசு தலைவராகிறார்?
தமிழகத்தை சேர்ந்தவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் பதவியில் அமரச்செய்ய அ.தி.மு.க., சமாஜ்வாடி கட்சி (முலாயம்சிங் , திரிணாமுல் காங்கிரஸ் ( மம்தா) ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. வரும் ஜுலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து நடக்கவிருக்கும் தேர்தலில் யாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிக்கலாம் என காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு [...]
கலெக்டரை மீட்க மாநில அரசுக்கு உதவி: மத்திய அரசு
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநில அரசுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஆர்பி சிங் கூறுகையில், கலெக்டரை மீட்க சத்தீஸ்கர் மாநில அரசுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என கூறினார்.
மேற்கு வங்க அரசுக்கு சொந்தமாக டி.வி.,நாளிதழ் தொடங்க மம்தா முடிவு!
கொல்கத்தா, ஏப். 21, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வடக்கு 24 பர்சானாஸ் மாவட்டத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, தொண்டர்களுக்கு சில கட்டளைகளை பிறப்பித்தார். மேற்கு வங்கத்தில் தனது தலைமையில் நடைபெறும் ஆட்சி பற்றி கம்யூனிஸ்டு ஆதரவு டி.வி. சேனல்கள் தவறான பிரசாரம் செய்து தனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதத்தில், சிறு சிறு குறைகளையும் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றன. எனவே அந்த டி.வி. சேனல்களை [...]
இந்திய-அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநாடு
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுதல் உள்ளிசுட பல்வேறு பிரச்னைகள் குறித்து, இந்திய-அமெரிக்கா இடையேயான உள்நாட்டு பாதுகாப்பு மாநாடு இன்று (ஏப்.20) தில்லியில் நடக்கிறது. இம்மாநாட்டில் இந்திய உள்துறை செயலர் மற்றும் அமெரிக்க அமைச்சர் உள்ளிட்டோ ர் கலந்து கொள்கின்றனர். இன்று நடக்கவுள்ள உள்நாட்டு பாதுகாப்பு மாநாட்டில் உள்துறை செயர் ஆர்.கே.சிங், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு இணை அமைச்சர் ஜானேலூட் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் சமீபத்தில் பாகிஸ்தானைச்சேர்ந்த பயங்கரவாதி ஹபீஸ் சையத் தலைக்கு [...]






2762.00