தமிழ் செய்திகள் » தெரிந்து கொள்வோம் “தெரிந்து கொள்வோம்”

சூரியனிடமிருந்து வைட்டமின் D பெறலாம்!

சூரியனிடமிருந்து வைட்டமின் D  பெறலாம்!

பொதுவாக பருவ காலங்கள் 4 என்பார்கள். ஆனால் சென்னையில் மூன்றே காலங்கள் தான்: வெய்யில், கடும் வெய்யில், கொளுத்தும் வெய்யில்! ஜனவரி கடைசி வாரத்தில் இருந்தே சென்னையில் வெய்யில் காலம் ஆரம்பித்து விட்டது. ஏப்ரல், மே மாதங்களில் சொல்லவே வேண்டாம். கத்தரி வெய்யில் நம்மைக் கதற அடிக்கும். குளிர் பானங்களும், ஐஸ் கிரீம்களும் விற்பனையில் கொடிகட்டி பறக்கும். எப்படி எப்படியெல்லாம் நம்மை சூரிய வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்று பத்திரிக்கைகளில் பத்தி பத்தியாக எழுதி நம்மை ஒரு [...]

February 22 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

இன்று பாலிண்ட்ரோம்!

இன்று பாலிண்ட்ரோம்!

இன்றைய தேதி என்ன? 21.02.2012. இதில் ஒரு ஆச்சரியம் பாருங்கள். வலது பக்கத்தில் இருந்து படித்தாலும், இடது பக்கத்தில் இருந்து படித்தாலும் ஒரே மாதிரியே வரும். இப்படி இருக்கும் அமைப்பை ஆங்கிலத்தில் ‘palindrome’ என்கிறார்கள். பாலிண்ட்ரோம் அமைப்பு ஒரு வார்த்தையிலோ, ஒரு வாக்கியத்திலேயோ அல்லது சில எண்களின் கூட்டமைப்பிலோ வரலாம்.  பாலிண்ட்ரோம் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து எடுக்கப் பட்டது. palin என்றால் மறுபடியும் என்று அர்த்தம். dromos என்றால் way, direction என்று பொருள். [...]

February 21 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

வயது முதிர்ந்தவர்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

வயது முதிர்ந்தவர்களுக்கான  ஆரோக்கிய குறிப்புகள்

ஆரோக்கியம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும், வயது ஏற ஏற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கலாம். தொலைபேசியில் பேசும்போது இடது காதில் ரிசீவரை வைத்துக் கொண்டு பேசவும். இரண்டு வேளை காப்பி அருந்த வேண்டாம். குளிர்ந்த தண்ணீரில் (ப்ரிட்ஜ் தண்ணீர்) மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். மாலை 5 மணிக்கு மேல் கனமான  ஆகாரம் வேண்டாம். எண்ணெய் பதார்த்தங்களை கூடுமானவரையில் தவிர்க்கவும். காலை வேளைகளில் நீர் அதிகம் அருந்தவும். இரவு [...]

February 20 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம், மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

ருத்ராக்ஷத்தின் ஆற்றல்

ருத்ராக்ஷத்தின்   ஆற்றல்

ருத்ராக்ஷம் பெயர்க் காரணம்: ருத்ராக்ஷம் என்பதை ருத்ர + அக்ஷ என்று பிரிக்கலாம். ருத்ர என்பது சிவபெருமானையும் அக்ஷ என்பது கண்ணீரையும் குறிக்கும். இந்தப் பூவுலகத்தில் மனிதர்கள் படும் துன்பங்களைப் பார்த்து பொறுக்கமுடியாமல் நீண்ட தவத்தில் ஆழ்ந்துவிட்டாராம். அவர் கண்களைத் திறந்த போது அவரது கண்களிலிருந்து சில கண்ணீர் துளிகள் பூமி தாயின் மடி  மேல் விழ, அந்த இடத்தில் ருத்ராக்ஷ மரங்கள் முளைத்தனவாம். கிடைக்கும் இடங்கள்: ருத்ராக்ஷம் என்பது ஒரு வகைப் பழத்தின் விதை. இதனுடைய தாவரவியல் [...]

February 20 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

வெள்ளரி காயின் நன்மைகள்

வெள்ளரி காயின் நன்மைகள்

வெள்ளரிக் காயை விரும்பாதவர்கள் மிகச் சிலரே. அதுவும் பிஞ்சு வெள்ளரி என்றால் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்த காய் இது.  சமைக்காமலேயே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் இதுவும் ஒன்று. வெள்ளரிப் பச்சடி, வெள்ளரி துவையல் என்று பலவிதமாக சமைக்கவும் செய்யலாம். நீர் நிறைந்த காய், கலோரி குறைந்தது என்பதனால் உணவு கட்டுப் பாட்டில் இருப்பவர்களும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிடும் பொருளாக மட்டுமில்லாமல் வேறு பலவிதங்களிலும் இதனை பயன் படுத்தலாம் என்று சொல்லவே இந்தக் [...]

February 19 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம், மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

மாடல் வீடுகள் – தரை தளம்

மாடல் வீடுகள் – தரை தளம்

Kerala style single floor house plan – 1500 Sq. Ft. House Details Area Details:1500 sqft Porch Sit out Living Dining 2Bed attached Kitchen Work area For More information about this single floor house plan, Contact Architect:Green Homes Revenue Tower, Thiruvalla MOB:+91 99470 69616 Beautiful single floor house elevation and Plan – 1070 sq. ft.  PLAN [...]

February 18 2012 | பதிவுகள் தமிழ் கட்டுரைகள், தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

வீட்டு உபயோகப் பொருட்களில் சிக்கனம்

வீட்டு உபயோகப் பொருட்களில் சிக்கனம்

சமீபத்தில் நண்பர் ஒருவரின் ‘புதுமனை புகும் விழா’ வுக்குச் சென்றிருந்தேன். “3 படுக்கை அறைகள் – with attached bath…… வீடு முழுவதும் சுமார் 100 மின்சார இணைப்புகள்… plug points,  மின்விளக்கு, மற்றும் மின் விசிறி வசதியுடன்…….நீங்கள் எங்கு உட்கார்ந்து வேண்டுமானாலும்  படிக்கலாம்; உங்கள் தலைக்கு மேல் மின் விளக்கு, மின் விசிறி இருக்கும். கைபேசியை சாரஜ் செய்யலாம்….”என்று பெருமையுடன் வீட்டைச்சுற்றி காண்பித்தார்.   நம் எல்லோருக்கும் சகல வசதிகளுடன் கூடிய வீடு என்பது பெரிய [...]

February 17 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம், மற்றவை | செய்தி தொடர்ச்சி »

வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் மற்றும் வாழைத்தண்டு

வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் மற்றும் வாழைத்தண்டு

வெள்ளரிக்காய்:   நீர்ச்சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. பிஞ்சு வெள்ளரிக்காயைப் பச்சையாகவும் தடிமனான வெள்ளரியைக் கூட்டு செய்தும் சாப்பிடலாம். தாகத்தைத் தணிக்கும். சருமப் பிரச்னைகள் நீங்கும். உடல் குளுமைக்காகவும் தினமும் பச்சடி, சாலட் செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.   வெண்டைக்காய்: அதிக அளவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, பொட்டாஷியம் ஓரளவும், மாவுச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின்  குறைந்த அளவும் [...]

February 16 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

கேரட், பீன்ஸ் மற்றும் சிவப்புப் பூசணி

கேரட், பீன்ஸ் மற்றும் சிவப்புப் பூசணி

கேரட்:  பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாஷியம், ஃபோலிக் அமிலம், கோலின், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச் சத்தும் இதில் உண்டு. கண், தோல் மற்றும்  எலும்பு உறுதிபடவும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது. குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயோதிகர்கள் எல்லோரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டும். துருவியும் சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து அப்படியே சாப்பிடலாம். [...]

February 16 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு

நாம் சாப்பிடும் உணவு சத்து உள்ளதாக இருக்க வேண்டும். அதிலும் பரீட்சை நேரத்தில் ரொம்பவே கவனம் தேவை. அதற்கான, உணவு டைம் டேபிள். காலை எழுந்ததும்: வெறும் வயிற்றுடன் புத்தகத்தைத் தொடாதீர்கள். பல் துலக்கிவிட்டு, பால் அல்லது, ஊட்டச் சத்து பானத்துடன் படிக்க ஆரம்பியுங்கள். மினி டிஃபன்! : பாலுடன் பிஸ்கெட், சில பிரெட் துண்டுகள் என்று மினி டிஃபனை எடுத்துக்கொண்டால், இன்னும் தெம்பாகப் படிக்கலாம். காலை உணவு : காலை உணவு மிக மிக அவசியம். [...]

February 15 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம், மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »