தமிழ் செய்திகள் » தெரிந்து கொள்வோம் “தெரிந்து கொள்வோம்”

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு

நாம் சாப்பிடும் உணவு சத்து உள்ளதாக இருக்க வேண்டும். அதிலும் பரீட்சை நேரத்தில் ரொம்பவே கவனம் தேவை. அதற்கான, உணவு டைம் டேபிள். காலை எழுந்ததும்: வெறும் வயிற்றுடன் புத்தகத்தைத் தொடாதீர்கள். பல் துலக்கிவிட்டு, பால் அல்லது, ஊட்டச் சத்து பானத்துடன் படிக்க ஆரம்பியுங்கள். மினி டிஃபன்! : பாலுடன் பிஸ்கெட், சில பிரெட் துண்டுகள் என்று மினி டிஃபனை எடுத்துக்கொண்டால், இன்னும் தெம்பாகப் படிக்கலாம். காலை உணவு : காலை உணவு மிக மிக அவசியம். [...]

February 15 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம், மருத்துவம் | செய்தி தொடர்ச்சி »

நேர மேலாண்மை (Time Management)

நேர மேலாண்மை (Time Management)

தொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரம்: மிகவும் பிசியாக இருக்கும் ஒரு அப்பா, தன் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு இரவில் வெகு நேரம் கழித்து வீடு திரும்பும்போது, தன் குழந்தை பொம்மை கேட்டது நினைவுக்கு வர, பூட்டியிருக்கும் கடையைத் திறந்து பொம்மை வாங்கி வருவார். தன் குழந்தை தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்ற அப்படிச் செய்வதாக அந்த விளம்பரம் சொன்னாலும், நாம் எல்லோருமே இப்படித்தான் பல வேலைகளை ஒரே நேரத்தில் முடிக்க முடியாமல் தவிக்கிறோம். “நேற்று [...]

February 15 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

வைகையின் வாழ்க்கை

வைகையின் வாழ்க்கை

    வைகையின் வாழ்க்கை – சோதனைகளை மீறி வந்த வெள்ளத்தின் அழகைக் காட்டியபடி, வைகை நதியின் அவல நிலையை நினைவுகூறும் காட்சி வடிவ ஆதங்கம். நவம்பர் 26, 2011ல் கரைபுரண்டோடிய வைகை, பல கோணங்களில் பாயும் அழகு!

February 14 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

இன்றைய செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி: உலக மக்களில் மிகவும் மகிழ்ச்சியாக  இருப்பவர்கள் பட்டியலில்  இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள்! பணப் பற்றாக்குறை, சண்டைகள், முரண்பாடுகள், இயற்கையின் சீற்றம் இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தோனேஷியா, இந்தியா, மெக்ஸிகோ நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்ற பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளார்கள். பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது என்பதை இந்த ஆய்வு நிரூபித்து இருக்கிறது. மிக முன்னேறிய நாடான அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் [...]

February 13 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசன்

இன்றைய உலகில் தினமும் மாலைப்பொழுதில் சூரியன் மறைந்த பின்பு இரவிலும், பகலைப் போல மின்னுகிறதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசன் தான். இவர் அமெரிக்கவின் மிலன் நகரில் 1847ல் பிப்.,11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தவர். இவர் மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிராப், டெலி பிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். இவர் அமெரிக்காவில மட்டும் தன் பெயரில் 1,093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களை [...]

February 10 2012 | பதிவுகள் தமிழ் கட்டுரைகள், தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

லீப் வருடத்தின் சிறப்பு என்ன!

லீப் வருடத்தின் சிறப்பு என்ன!

லீப் வருடம் – பல சுவையான தகவல்கள் நீங்கள் உங்கள் ‘பொன்னான  பிறந்த’ (Golden Birthday)  நாளைக் கொண்டாடி இருக்கிறீர்களா? ‘ பொன்னான பிறந்த நாளா?’  என்று வியப்பவர்களுக்கு: உங்கள் பிறந்த தேதியும், உங்கள் வயதும் ஒன்றாக இருந்தால்   (அதாவது 27 ஆம் தேதி உங்கள் 27 வது பிறந்தநாள் வந்தால் அதுதான் உங்களது ‘பொன்னான பிறந்த நாள்’. 1953 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் தங்களது 53 வது பிறந்த நாளை ‘ பொன்னான பிறந்த நாளா’ கக் கொண்டாடலாம். சரி லீப் வருடத்தில் பிப்ரவரி 29 [...]

February 8 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம், ஓர் அழகான மாநிலம். உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதியும், ஓர் தனி உலகம் போல் இருக்கும். உத்தரப் பிரதேசம் 70 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 70 மாவட்டங்கள் 17 ஆட்சிப் பிரிவுகளுள் அடங்கும். இப்பிரிவுகள் ஆக்ரா, அஸம்கர், அலகாபாத், கான்பூர், கோராக்பூர், சித்ரகூட், ஜான்சி, தேவிபதான், பைஸாபாத், பரைச், பரேலி, பஸ்தி, மிர்ஸாபூர், மொராதாபாத், மீரட், லக்னௌ, வாரணாசி, சஹரன்பூர். சின்ன வயதில் நாம் படித்த இந்திய வரலாறு, அனேகமாக உத்தர பிரதேசத்தின் வரலாறாகத் [...]

February 6 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

ஐ.வி.எஃப் – சரோகசி

ஐ.வி.எஃப் – சரோகசி

ஐ.வி.எஃப் – சரோகசி “டிசெம்பர் 1 ஆம் தேதி அன்று ஆமீர் கான் – கிரண் தம்பதிகள் ஐ.வி.எஃப் – சரோகசி முறையில் ஒரு ஆண் குழந்தை பெற்றனர்.” போன வாரம் இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்திலேயே வந்திருந்தது. ‘பாலிவுட் நம்பர் 1 நடிகர் ஆமீர்; பணத்திற்குக் குறைவில்லை; எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்; இதென்ன பெரிய விஷயம்?’ என்கிறீர்களா? நிஜம் தான். அவருக்கு என்றில்லை, நம் நாட்டில் இருக்கும் ஜனத் தொகையைப் [...]

February 1 2012 | பதிவுகள் அறிவியல், தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

சரோகசி (Surrogacy) என்றால் என்ன?

சரோகசி (Surrogacy) என்றால் என்ன?

ஒரு பெண் இன்னொருபெண்ணின் கர்ப்பத்தைத் தாங்கி குழந்தையைப் பெற்று எடுப்பது தான் சரோகசி. சரோகசி என்கிற இந்த சொல் surrogatus என்கிற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் ‘ஒருவருக்கு பதிலாக’ அல்லது ‘ஒருவரின் இடத்தில்’ என்பது. ஒரு பெண் தன் கர்ப்பப்பையை இன்னொருவரின் கர்ப்பத்தைத் தாங்குவதற்காக பயன் படுத்துவதுதான் இந்த சரோகசி. இப்படி இன்னொருவரது கர்ப்பத்தைத் தாங்கும் பெண்ணை சரோகேட்  மதர் அல்லது வாடகைத் தாய் என்கிறார்கள். மரபியல் மூலமாக வாடகைத் தாய்க்கும் அவர் [...]

February 1 2012 | பதிவுகள் அறிவியல், தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »

அனுமானுக்கு வெண்ணெய், வடை மாலை சார்த்துவது ஏன்

அனுமானுக்கு வெண்ணெய், வடை மாலை சார்த்துவது ஏன்

வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது. வடை [...]

January 31 2012 | பதிவுகள் தெரிந்து கொள்வோம் | செய்தி தொடர்ச்சி »