தமிழ் செய்திகள் » விளையாட்டு “விளையாட்டு”

முத்தரப்பு கிரிக்கெட் : இலங்கை வெற்றி

முத்தரப்பு கிரிக்கெட் : இலங்கை வெற்றி

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இன்று (பிப்.21)  நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. முன்னதாக பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 289 ரன் எடுத்தது. 290 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 45.1 ஓவரில் அனைத்து வீக்கெட்களையும் இழந்து 238 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 51 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.ஆட்டநாயகன் விருதை இலங்கை வீரர் [...]

February 21 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

முத்தரப்பு கிரிக்கெட் : சேவக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்

முத்தரப்பு கிரிக்கெட் : சேவக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்

பிரிஸ்பனில் நடைபெற்றுவரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில், இன்று (பிப்.21) நடைபெறும் இலங்கையுடனான ஆட்டத்தில், இலங்கை அணி, இந்தியாவுக்கு 290 ரன் இலக்காக நிர்ணயித்தது.  இந்திய அணியின் ஷேவாக், 2 வது ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

February 21 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

முத்தரப்பு கிரிக்கெட் : டாஸ் இலங்கை அணி பேட்டிங்

முத்தரப்பு கிரிக்கெட் : டாஸ் இலங்கை அணி பேட்டிங்

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் பிரிஸ்பனில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணி  முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியில், தோனிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடந்த இரண்டு போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்த சேவாக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக பார்த்தீவ் பட்டேல் களமிறக்கப்படுகிறார். இந்தப் போட்டியில் ஸாகீர்கான், ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்தப் போட்டியில் ஓய்வு பெற்ற அஷ்வின், இந்தப் போட்டியில் இடம்பெற்றுள்ளார்.

February 21 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு : பாண்டிங் அறிவிப்பு

சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு : பாண்டிங் அறிவிப்பு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட தான் விரும்பவில்லை என்று கூறியுள்ள பாண்டிங், தேர்வுக் குழுவினர் தன்னை அணியில் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிந்துவிட்டதாக கூறியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி, சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிப்பேன் என்றும் பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தன்னால் [...]

February 21 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

முத்தரப்பு கிரிக்கெட் : இந்தியாவிற்கு வெற்றி இலக்கு 290

முத்தரப்பு கிரிக்கெட் : இந்தியாவிற்கு வெற்றி இலக்கு 290

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் எடுத்துள்ளது. இதன்மூலம், இந்திய அணிக்கு 290ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை தரப்பில் திரிமானே அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில், பதான் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. [...]

February 21 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

ரோட்டர்டாம் டென்னிஸ் : பட்டம் வென்றார் ஃபெடரர்

ரோட்டர்டாம் டென்னிஸ் : பட்டம் வென்றார் ஃபெடரர்

ரோட்டர்டாம் டென்னிஸ் தொடரில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த ஆண்டில் அவர் வென்ற முதல் A.T.P. சாம்பியன் பட்டம் இதுவாகும். நெதர்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஃபெடரர் , அர்ஜென்டினாவின் டெல் போட்ரோ-வை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 6-4 என வென்று 2-பூஜ்ஜியம் என்ற நேர் செட் [...]

February 20 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

ரிக்கி பாண்டிங் நீக்கம்

ரிக்கி பாண்டிங் நீக்கம்

ஆஸ்திரேலிய ஒருதின கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 5 இன்னிங்கிஸ் பாண்டிங் சராசரியாக 3.6 ரன்களை எடுத்திருந்தார். இதனால் அதிருப்தியில் இருந்த தேர்வுக்குழுவினர் இன்று அவரை அணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர்.

February 20 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

தோனிக்கு தடை: இலங்கைக்கு எதிரான போட்டியில் சேவாக் கேப்டன்

தோனிக்கு தடை: இலங்கைக்கு எதிரான போட்டியில் சேவாக் கேப்டன்

இலங்கைக்கு எதிராக நாளை (பிப்.21) நடைபெற உள்ள முத்தரப்பு ஒருதினத் தொடரில் விளையாட தோனிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதையடுத்து வீரேந்திர சேவாக் இந்திய அணிக்கு தலைமை ஏற்க உள்ளார். அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்கவில்லையெனினும் அவரே அணிக்கு தலைமை ஏற்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்த்திவ் படேல் விக்கெட் கீப்பராக நியமிக்கப்படக்கூடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

February 20 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

சச்சினுக்கு ஸ்கேன் எடுக்க பரிந்துரை

சச்சினுக்கு ஸ்கேன் எடுக்க பரிந்துரை

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று (பிப்.19) நடைபெற்ற ஒரு நாள் போட்டியில், பிரட் லீ வீசிய பந்து சச்சின் டெண்டுர்கரின் தலையை தாக்கியது. இதனைத் தொடர்ந்து மருத்துவரிடம் சென்ற சச்சின் டெண்டுல்கரை, முன்னெச்சரிக்கையாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து சச்சின் இன்று (பிப்.20) எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ள உள்ளார்.

February 20 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »

கத்தார் ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் பெலாரஸ் வீராங்கனை

கத்தார் ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் பெலாரஸ் வீராங்கனை

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு சாம்பியன் பட்டத்தை அஸாரென்கா கைப்பற்றியுள்ளார். கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று (பிப்.19) நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோ சர்-ஐ எதிர்த்து விடோ ரியா அஸரென்கா விளையாடினார். இதில் முதல் செட் ஆட்டத்தின் தொடக்கத்தில் சற்றே தடுமாறிய அஸரென்கா, பின்னர் சுதாரித்து விளையாடினார். முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய அஸரென்கா, இரண்டாவது செட் ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் [...]

February 20 2012 | பதிவுகள் விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »