தமிழ் செய்திகள் » தமிழக செய்திகள் “தமிழக செய்திகள்”

சேலம் மாவட்டத்தில் மயானக் கொள்ளை விழா

சேலம் மாவட்டத்தில் மயானக் கொள்ளை விழா

மகா சிவராத்திரியையொட்டி, ஆண்டுதோறும் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.  சேலத்தில் மயானக் கொள்ளை விழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மயானக் கொள்ளை விழாவின்போது அங்காளம்மன் கோயில்களுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் பெண்களைப் போலவும், கடவுள்களைப் போன்றும் வேடம் அணிந்து சுவாமி ஊர்வலத்தில் பங்கேற்பார்கள். அதேபோல் இந்த ஆண்டு மகா சிவராத்திரியையொட்டி சேலம் டவுன் அங்காளம்மன் கோயில், செவ்வாய்ப்பேட்டை வண்டிப்பேட்டை அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கடந்த சில நாள்களாக [...]

February 22 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

மின்வெட்டு: சென்னைக்கு 3 மணிநேரம், பிறபகுதிகளுக்கு 6 மணிநேரம்!

மின்வெட்டு: சென்னைக்கு 3 மணிநேரம், பிறபகுதிகளுக்கு 6 மணிநேரம்!

       சென்னை,பிப் 21, சென்னையில் மின்வெட்டை மூன்று மணிநேரமாக உயர்த்த தமிழக மின்சார வாரியம் பரிந்துரைத்துள்ளது. தற்போது  சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின் வெட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர பிற பகுதிகளில் 8 மணிநேர மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழில் நிறுவனங்களும் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக சென்னையில் மின்வெட்டை 3 மணிநேரமாக உயர்த்தியும், பிற பகுதிகளில் 8 மணிநேர மின்வெட்டை 6 மணிநேரமாக குறைக்கவும் [...]

February 21 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

கம்ப்யூட்டர் வரை படம் தயார்: கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவு

கம்ப்யூட்டர் வரை படம் தயார்: கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவு

வங்கி கொள்ளையர்கள் சென்னையில்தான் பதுங்கி இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். வங்கிக் கொள்ளையர்கள் எப்படி, இருந்தனர் என்று விசாரிக்கப்பட்டு புதிதாக கம்ப்யூட்டர் வரை படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கீழ்க்கட்டளை வங்கிக் கொள்ளை சம்பவம் சென்னை மாநகர போலீசாருக்கு கடும் சவால் விட்டது போல உள்ளது. பெருங்குடி பரோடா வங்கியில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட போது, கொள்ளையர்களை நெருங்கி விட்டோ ம், ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்று போலீசார் கூறினார்கள். ஆனால் இதுவரை யாரும் சிக்கவில்லை. கொள்ளையர்கள் [...]

February 21 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

நாளை காங்கிரஸ் பேச்சாளர்கள் கூட்டம்

நாளை காங்கிரஸ் பேச்சாளர்கள் கூட்டம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நாளை (பிப்.22) சத்தியமூர்த்திபவனில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதிலுமுள்ள காங்கிரஸ் பேச்சாளர்கள் 110 பேர்கள் பங்கேற்கிறார்கள். இன்றைய அரசியல் சூழ்நிலை, மத்திய அரசின் சாதனைகள், தமிழகத்தின் நிலைப்பாடுகள், காங்கிரஸ் கட்சியின் நிலையினை மக்களுக்கு தெளிவுப்படுத்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று, உரையாற்றி சிறப்பிக்க உள்ளனர் என்று அக்கட்சி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

February 21 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூடியது

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூடியது

தேமுதிக-வின் 7-வது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று (பிப்.21)  நடந்தது. முதலில் செயற்குழு கூடியது. இதில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 10 மணிக்கு காரில் வந்தார். அவரது கார் மட்டும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டது. மற்ற அனைத்து கார்களும் சாலையின் இருபுறமும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. விஜயகாந்த் வந்ததும் அவரது தலைமையில் செயற்குழு கூடியது. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பிரேமலதா விஜயகாந்த், [...]

February 21 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

சங்கரன்கோவிலில் 15ம் தேதி கருணாநிதி பிரசாரம்

சங்கரன்கோவிலில் 15ம் தேதி கருணாநிதி பிரசாரம்

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி மார்ச் 15-ம் தேதி பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க.வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி 15ம் தேதி சங்கரன்கோவிலில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக, தி.மு.க. சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 27ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு நடைபெறுகிறது. 5 மற்றும் 6ம் தேதிகளில் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகனும், 12,13 மற்றும் 14ம் தேதிகளில் கட்சி [...]

February 21 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

திருப்பூர் பிரபல நகைக்கடையில் 40 கிலோ நகைகள் கொள்ளை

திருப்பூர் பிரபல நகைக்கடையில் 40 கிலோ நகைகள் கொள்ளை

திருப்பூரில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் 40 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. நேற்றிரவு (பிப்.20) நடைபெற்றுள்ளதாக கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் குமரன் சாலையில் உள்ள அந்த நகைக் கடையில் நேற்றிரவு பின்புறமாக துளை போட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். வெல்டிங் கருவி மூலமாக கிரில் கதவுகளை உடைத்துச் சென்ற அவர்கள், அங்கிருந்த தங்கம், [...]

February 21 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

ரயில் கட்டணம் உயராது: சென்னையில் ரயில்வே அமைச்சர் பேட்டி

ரயில் கட்டணம் உயராது: சென்னையில் ரயில்வே அமைச்சர் பேட்டி

மத்திய ரயில்வே அமைச்சர் திரிவேதி கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு; கே: ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில் திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகுமா? ப: புதிய ரயில்கள் விடுவது மட்டும் நாட்டின் வளர்ச்சி ஆகாது. சமீபகால மாக ரெயில்வே துறையில் சரக்கு போக்குவரத்து பலமடங்கு அதிகரித்து உள்ளது. ரெயில்வே துறையை நவீனப்படுத்துதல், அபிவிருத்தி பணிகள், உள்கட்ட மைப்பு வசதிகளை உருவாக்குவது அவசியம் ஆகும். [...]

February 21 2012 | பதிவுகள் சென்னை செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

சிவராத்திரி: திருவண்ணாமலையில் லட்ச தீபம்

சிவராத்திரி: திருவண்ணாமலையில் லட்ச தீபம்

சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில், சிவராத்திரியை முன்னிட்டு ஆலயத்தின் முகப்புப் பகுதியிலிருந்து, உள் பிரகாரம் வரை தீபங்களால் அலங்கரிக்கப்பட்டன. அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. சிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு நேற்று வந்திருந்தனர். ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சிவராத்திரி பண்டிகையில் பங்கேற்றனர். ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை உணர்த்தும் வகையில் சிவன் [...]

February 21 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

ஈரோடு பகுதியில் 21 சாயத் தொழிற்சாலைகள் இடிப்பு

ஈரோடு பகுதியில் 21 சாயத் தொழிற்சாலைகள் இடிப்பு

ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதியின்றி இயங்கி வந்த 21 சாயத் தொழிற்சாலைகளை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாயத்துறை, மின்வாரியம், மற்றும் காவல்துறையினர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது. சாயத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஈரோடு ரயில் நிலையம், கொல்லம்பாளையம், கருங்கல் பாளையம் சூரியம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாத சாயத் தொழிற்சாலைகள் கிரேன் மூலம் [...]

February 21 2012 | பதிவுகள் தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »