தமிழ் செய்திகள் » சர்வதேசம் “சர்வதேசம்”

நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் பாகிஸ்தான் பயணம்

நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் பாகிஸ்தான் பயணம்

பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் ஃபெமிடா மிர்ஸாவின் அழைப்பை ஏற்று மக்களவை சபாநாயகர் மீரா குமார் இன்று (பிப்.21) பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பி.பி.பைஷியா மற்றும் ஷனாவாஸ் ஹுசேன் உட்பட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் கிலானி, பாராளுமன்ற சபாநாயகர் மிர்ஸா, நாடாளுமன்ற தலைவர் பரூக் நேக் ஆகியோரை மீரா குமார் நாளை சந்திக்கிறார். தொடர்ந்து, இந்த நாடாளுமன்ற குழு, லாகூருக்கு சென்று பஞ்சாப் ஆளுனர் [...]

February 21 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : இத்தாலி எச்சரிக்கை

மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : இத்தாலி எச்சரிக்கை

இரு இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் ‘குறிப்பிடத்தக்க சட்ட ரீதியான வேறுபாடுகள்’ இருப்பதாக இத்தாலி வெளியுறவு அமைச்சர் கிலியோ டெர்ஸி நேற்று (பிப்.20) எச்சரித்தார். இந்திய மீனவர்களைச் சுட்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கும் இத்தாலி கப்பலைச் சேர்ந்த இரு காவலர்களுக்கும் இந்தியச் சட்டத்திலிருந்து ‘பாதுகாப்பு’ இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ‘இப்போதைக்கு இருநாடுகளுக்கும் இடையே சட்ட ரீதியான வேறுபாடுகள் உள்ளன. இந்த விவகாரத்தில் விரைவான தீர்வை எட்டுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு எதுவும் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையே இல்லை’ [...]

February 20 2012 | பதிவுகள் இந்தியா, சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

மெமோகேட் விவகாரம்: பாகிஸ்தான் பிரதிநிதி லண்டன் பயணம்

மெமோகேட் விவகாரம்: பாகிஸ்தான் பிரதிநிதி லண்டன் பயணம்

பாகிஸ்தானில், ‘மெமோகேட்’ விவகாரத்தில், முக்கிய நபரான தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் லண்டனில் இருந்தபடியே தனது வாக்குமூலத்தைக் கொடுக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கண்காணிக்க, விசாரணைக் குழுவின் செயலரான மாஜிஸ்திரேட் ராஜா ஜாவத் அப்பாஸ், நேற்று (பிப்.19) லண்டன் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்படும் ராணுவத்தை அடக்கி வைப்பது குறித்து, அமெரிக்க ராணுவ தளபதிக்கு அந்நாட்டின் அதிபர் சர்தாரி கடிதம் எழுதியதாகக் கூறப்படும், ‘மெமோகேட்’ விவகாரத்தின் மைய நபரான தொழிலதிபர் மன்சூர் இஜாஸ், இம்மாதம் [...]

February 20 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

ஏமன் அதிபர் தேர்தல் : களத்தில் ஒரே ஒரு வேட்பாளர்

ஏமன் அதிபர் தேர்தல் : களத்தில் ஒரே ஒரு வேட்பாளர்

ஏமனில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே களத்தில் உள்ளார். துணை அதிபர் அப்த்-ரபு மன்சோர் ஹாடி இந்த தேர்தலில் அதிபர் பதவிக்காக போட்டியிடவுள்ளார். ஏமனில் நிலவும் நிலையற்ற சூழலிலிருந்து தங்கள் நாட்டை ஹாடி காப்பாற்றுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். சாடா என்னும் இடத்திலும், சில தென் நகரங்களிலும் தேர்தலை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. தேர்தலையொட்டி ஏமன் தலைநகர் சனாவில் முழுவீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. துணை அதிபரான [...]

February 20 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: 20 பேர் பலி

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: 20 பேர் பலி

ஈராக்கில் போலீஸ் அகாடமியில் நேற்று (பிப்.19) நடந்த கார் குண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பாலஸ்டின் நகரில் போலீஸ் அகாடமி உள்ளது. நேற்று போலீஸ் அகாடமியின் கட்டடத்தை நோக்கி காரில் வந்த மர்ம நபர் ஒருவர் சோதனை சாவடி தடுப்பு வேலியை இடித்து விட்டு தாக்குதல் நடத்தினான். இத்தாக்குதலில் கார் குண்டு வெடித்தது. இதில் 20 பேர் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர். பலியானவர்கள், பயிற்சிக்காக வந்த [...]

February 20 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் : 113 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் : 113 பேர் பலி

பிலிப்பைன்சில் பிப்.6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. அந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. 61 பேரை காணவில்லை என்றும், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிலிப்பைன்ஸ் சிவில் டிபென்ஸ் துறை தெரிவித்துள்ளது.

February 20 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

மெக்சிகோ சிறைக் கலவரம்: 38 கைதிகள் பலி

மெக்சிகோ சிறைக் கலவரம்: 38 கைதிகள் பலி

மெக்சிகோவில் சிறையில் நேற்று (பிப்.19) நள்ளிரவு ஏற்பட்ட கலவரத்தில் 38 கைதிகள் கொல்லப்பட்டனர். லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவின் வடக்கு மாகாணமான மான்டெரரி பகுதியில் ஆப்போடாகா எனும் சிறைச்சாலை உள்ளது. இங்கு போதை மருந்து கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய் கைதிகள் உள்ளனர். இச்சிறையில் நேற்று நள்ளிரவில் இரு கோஷ்டிகளிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் கையில் கிடைத்த பயங்கர ஆயுதங்களால் கைதிகள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் 38 கைதிகள் [...]

February 20 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

பிரபல பாப் பாடகர் ஹுஸ்டன் உடல் அடக்கம்

பிரபல பாப் பாடகர் ஹுஸ்டன் உடல் அடக்கம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் பாடகர் வொயிட்னி ஹுஸ்டன் உடல் நேற்று (பிப்.19) அடக்கம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் வொயிட்னி ஹுஸ்டன், கடந்த 11-ம் தேதியன்று கலிபோர்னியாவில் இறந்தார். இவரது மரணம் குறித்து இதுவரை காரணம் அறியப்படவில்லை. அவரது உடல் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள தனியார் கல்லறையில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த இடத்திற்கு அருகில் தான் ஹுஸ்டனின் தந்தை சமாதி உள்ளது கடந்த 2003-ம் [...]

February 20 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

ராஜீவ்காந்தி கொலை பற்றி இலங்கை அமைச்சர் புதிய தகவல்

ராஜீவ்காந்தி கொலை பற்றி இலங்கை அமைச்சர் புதிய தகவல்

ராஜீவ்காந்தி படுகொலை குறித்து இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர், விமல் வீரவன்ச. அமெரிக்க நாட்டின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வின் சதித் திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த காரியத்தை செய்தது அமெரிக்காதான். பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், [...]

February 18 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

பாகிஸ்தான் நீதித்துறை கமிஷன் மார்ச் 12 அன்று இந்தியா வருகை

பாகிஸ்தான் நீதித்துறை கமிஷன் மார்ச் 12 அன்று இந்தியா வருகை

வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதியன்று பாகிஸ்தான் நீதித்துறை கமிஷன் இந்தியாவுக்கு வருகை தரும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதியன்று பாகிஸ்தான் நீதித்துறை கமிஷன் இந்தியாவுக்கு வருகை தரும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் நாட்டின் உயர் ஆணையர் ஷஹீத் மாலிக்கை சந்தித்து பேசிய உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் நேற்று கூறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். [...]

February 17 2012 | பதிவுகள் சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »