தமிழ் செய்திகள் » இலங்கை செய்திகள் “இலங்கை செய்திகள்”

இலங்கையில் மூன்று கட்சிகளின் அங்கீகாரம் ரத்து

இலங்கையில் மூன்று கட்சிகளின் அங்கீகாரம் ரத்து

இலங்கை தேர்தல் ஆணையம், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி உள்ளிட்ட மூன்று கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, ஈழம் தேசிய குடியரசு முன்னணி மற்றும் தேசிய ஐக்கிய கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும், தேர்தல் சட்டம், 1981ன் படி, தங்கள் வருமானவரிக் கணக்கு விவரங்களை செலுத்தாததால் அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக, இலங்கை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து, இலங்கையில், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் [...]

February 1 2012 | பதிவுகள் இலங்கை செய்திகள், சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி அபாயம்: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி அபாயம்: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை

இலங்கையில் இனிவரும் மாதங்களில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொடகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இதைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் அதிகளவு வட்டி விதிக்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் குற்றம் சுமத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக் கொண்டால் இரண்டு வீத வட்டியை செலுத்த வேண்டுமென ஆளுனர் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டு வர்த்தக [...]

January 31 2012 | பதிவுகள் இலங்கை செய்திகள், சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

இலங்கைக்கு இந்தியா 100 கோடி கல்வி உதவி: எஸ்.எம்.கிருஷ்ணா

இலங்கைக்கு இந்தியா 100 கோடி கல்வி உதவி: எஸ்.எம்.கிருஷ்ணா

இந்தியாவின் உதவியுடன் காலே-ஹிக்கடுவா இடையேயான ரயில்வே பாலத்தை இலங்கை கட்டி முடித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, அந்த ரயில் பாதையை இன்று (ஜன.19) துவக்கி வைத்து பேசியதாவது:- இலங்கையில் மனிதவள மேம்பாட்டுக்கு உதவும் வகையில், இந்திய அரசு 100 கோடி ரூபாயை கல்வி உதவிக்காக அளிப்பதில் பெருமை அடைகிறேன். இலங்கை மாணவர்களுக்கான கல்வி கட்டணம், புத்தக கட்டணம், தங்குவதற்கான கட்டணம், மாதாந்திர சம்பளம் உள்ளிட்ட இந்த உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மேலும் [...]

January 19 2012 | பதிவுகள் இலங்கை செய்திகள், சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

இலங்கை நாடாளுமன்றத்தை குலுக்கிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல்

இலங்கை நாடாளுமன்றத்தை குலுக்கிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல்

நடிகர் தனுஷின் ஒய் திஸ் கொலவெறி  பாடலினால் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (ஜன.19) நடைபெற்ற விவாதம் சுவாரஸ்யமாக இருந்ததுடன், சபையில் இருந்த இருதரப்பினரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். நாடாளுமன்றத்தில் நேற்று ஊழியர் சகாயநிதியம் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சியின் எம்.பி.யான அஸ்வர் ஜே.வி.பி.யை பார்த்து  ஒய் திஸ் கொலவெறி  எனக் கேட்க எமக்கு நோ கொலை வெறி என ஜே.வி.பி. எம்.பி. தெரிவித்தபோது சபையில் சிரிப்பொலி எழுந்தது. ஆளும் கட்சியின் எம்.பி.யான [...]

January 19 2012 | பதிவுகள் இலங்கை செய்திகள், சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

இலங்கையின் 64 வது சுதந்திர தின விழாவை தமிழகத்திலும் நடத்த ஏற்பாடு

இலங்கையின் 64 வது சுதந்திர தின விழாவை தமிழகத்திலும் நடத்த ஏற்பாடு

தமிழகத்தில், இலங்கையின் 64வது சுதந்திர தின விழாவை நடத்த மகாபோதி சபையும், தென்னிந்தியாவில் அமைந்துள்ள இலங்கை உதவி தூதுவராலயமும் ஏற்பாடு செய்துவருவதாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் இடம்பெறவுள்ள இலங்கையின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, மதத் தலைவர்கள் மற்றும் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள [...]

January 19 2012 | பதிவுகள் இலங்கை செய்திகள், சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

இலங்கையில் தமிழ் மாணவன் 85% எடுத்தால்தான் தேர்ச்சி அடைய முடியும்: சீமான்

இலங்கையில் தமிழ் மாணவன் 85% எடுத்தால்தான் தேர்ச்சி அடைய முடியும்: சீமான்

இலங்கையில் தமிழ் மாணவர்கள் 85 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும் நிலை உள்ளதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார். நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நளா அரங்கில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜசோழன் கட்டினார். கரிகாலன் கல்லணையை கட்டினார். திருவள்ளூவர் திருக்குறளை இயற்றினார். இதுபோன்று தமிழர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினர். இலங்கை ராணுவத்தில் ஒரு [...]

December 1 2011 | பதிவுகள் இலங்கை செய்திகள், சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »

கொழும்பு – தூத்துக்குடி இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

கொழும்பு – தூத்துக்குடி இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

கொழும்பு, நவ.28 கொழும்பு – தூத்துக்குடி இடையே செயல்பட்டு வந்த சிறு கப்பல் போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சேவையை மும்பையைச் சேர்ந்த ஃபிளமிங்கோ லைனர்ஸ் நிறுவனம் இயக்கி வந்தது. கொழும்பு எரிபொருள் நிறுவனத்துக்கு பணம் செலுத்தததால் இதற்குப் பயன்பட்ட எம்.வி. ஸ்காட்டியா பிரின்ஸ் என்கிற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருள்களின் விலை உயர்வு, எரிபொருள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சேவை நிறுத்தப்பட்டதாக ஃபிளமிங்கோ லைனர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக [...]

November 28 2011 | பதிவுகள் இலங்கை செய்திகள், தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

இலங்கைக்கு இந்தியா நிதிஉதவி

இலங்கைக்கு இந்தியா நிதிஉதவி

இலங்கையில் உள்ள பழமை வாய்ந்த திருகேதீஸ்வரம் என்ற இந்து கோயிலை சீரமைக்க இந்தியா 326 மில்லியன் இலங்கை ரூபாய் நிதிஉதவி வழங்க உள்ளது. இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருகேதீஸ்வரம் கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலை புனரமைக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இதன்படி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் மற்றும் தொல்பொருள் மற்றும் சிற்பக்கலை கல்லூரி உதவியுடன் இந்த கோயில் சீரமைக்கப்பட உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள [...]

October 18 2011 | பதிவுகள் இலங்கை செய்திகள், வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று நள்ளிரவில் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத் தீவு அருகே நேற்று நள்ளிரவில் மீனவர்கள் வலைகளை விரித்து காத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 6 குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் கண்ணை கூச செய்யும் விளக்குகளை அடித்து கொண்டு மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்கள் ஒலிபெருக்கிகள் மூலம் இங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். தமிழக [...]

September 29 2011 | பதிவுகள் இலங்கை செய்திகள், சர்வதேசம், தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »

டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும் – முரளிதரன் நம்பிக்கை

டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும் – முரளிதரன் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்ததொடரில் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் 4-0 என தோல்வி அடைந்தது. இதனால் தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது. இந்நிலையில் முன்னாள் இலங்கை சுழல்பந்து வீச்சாளர் முரளிதரன், இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் மிகச் சிறந்த அணியாகும். இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இந்திய அணி சிறந்ததாக விளங்கியது. ஒரே ஒரு [...]

September 22 2011 | பதிவுகள் இந்தியா, இலங்கை செய்திகள், விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »