கொழும்பு, நவ.28 கொழும்பு – தூத்துக்குடி இடையே செயல்பட்டு வந்த சிறு கப்பல் போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சேவையை மும்பையைச் சேர்ந்த ஃபிளமிங்கோ லைனர்ஸ் நிறுவனம் இயக்கி வந்தது. கொழும்பு எரிபொருள் நிறுவனத்துக்கு பணம் செலுத்தததால் இதற்குப் பயன்பட்ட எம்.வி. ஸ்காட்டியா பிரின்ஸ் என்கிற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருள்களின் விலை உயர்வு, எரிபொருள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சேவை நிறுத்தப்பட்டதாக ஃபிளமிங்கோ லைனர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக [...]
November 28 2011 | பதிவுகள் இலங்கை செய்திகள், தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
இலங்கையில் உள்ள பழமை வாய்ந்த திருகேதீஸ்வரம் என்ற இந்து கோயிலை சீரமைக்க இந்தியா 326 மில்லியன் இலங்கை ரூபாய் நிதிஉதவி வழங்க உள்ளது. இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருகேதீஸ்வரம் கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலை புனரமைக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இதன்படி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் மற்றும் தொல்பொருள் மற்றும் சிற்பக்கலை கல்லூரி உதவியுடன் இந்த கோயில் சீரமைக்கப்பட உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள [...]
October 18 2011 | பதிவுகள் இலங்கை செய்திகள், வர்த்தகம் | செய்தி தொடர்ச்சி »
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று நள்ளிரவில் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத் தீவு அருகே நேற்று நள்ளிரவில் மீனவர்கள் வலைகளை விரித்து காத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 6 குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் கண்ணை கூச செய்யும் விளக்குகளை அடித்து கொண்டு மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்கள் ஒலிபெருக்கிகள் மூலம் இங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். தமிழக [...]
September 29 2011 | பதிவுகள் இலங்கை செய்திகள், சர்வதேசம், தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்ததொடரில் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் 4-0 என தோல்வி அடைந்தது. இதனால் தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்தது. இந்நிலையில் முன்னாள் இலங்கை சுழல்பந்து வீச்சாளர் முரளிதரன், இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் மிகச் சிறந்த அணியாகும். இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இந்திய அணி சிறந்ததாக விளங்கியது. ஒரே ஒரு [...]
September 22 2011 | பதிவுகள் இந்தியா, இலங்கை செய்திகள், விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »
இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த பயிற்சியை தொடர்ந்து இலங்கை கடற்படைக்கு பல்வேறு உதவிகளை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்ததற்காக உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை கடற்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை அரசுக்கு இந்தியா [...]
September 20 2011 | பதிவுகள் இலங்கை செய்திகள், சர்வதேசம், தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஆண்டு அரசு முறை பயணமாக அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக்கோரி சிறை கைதிகள் உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபர் 1986-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் [...]
September 20 2011 | பதிவுகள் இந்தியா, இலங்கை செய்திகள், சர்வதேசம், தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று (செப்.19) அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் நியுயார்க் சென்றுள்ளார். இன்று அதிகாலை தனி விமானமொன்றின் மூலம் ராஜபக்சேவும், பிரதிநிதிகள் குழுவினரும் புறப்பட்டுச் சென்றுள்ளனர். வரும் 23ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ராஜபட்ச உரையாற்றுகிறார். மாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
September 19 2011 | பதிவுகள் இலங்கை செய்திகள், சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »
ஊட்டியில் இலங்கை அகதிகளை 57 பேரை போலீஸார் செப்டம்பர் 22அம் தேதி கைது செய்தனர். கூடலூர் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் இன்று காலை ஈடுபட்டிருந்தபோது, 2 வேன் மற்றும் ஒரு ஜீப்பில் இலங்கை அகதிகள் இருப்பது தெரியவந்தது. ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஏஜென்ட் ஒருவர் அவர்களை அழைத்துச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் சென்னை புழல், சேலம், தொப்பம்பட்டி உள்ளிட்ட அகதி முகாம்களில் இருந்து அழைத்து செல்லப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது [...]
September 24 2010 | பதிவுகள் இலங்கை செய்திகள், தமிழக செய்திகள் | செய்தி தொடர்ச்சி »
இலங்கை கிழக்கு மாகானத்தில் இன்று ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கு – 60 பேர் பலியாகியுள்ளனர்.(டி என் எஸ்)
September 17 2010 | பதிவுகள் இலங்கை செய்திகள், சர்வதேசம் | செய்தி தொடர்ச்சி »
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து அதன் மூன்னிலை பெற்றுது. இந்திய – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கொழும்பு சாரா ப.ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சை இலங்கை அணி 425 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 180 [...]
August 6 2010 | பதிவுகள் இந்தியா, இலங்கை செய்திகள், விளையாட்டு | செய்தி தொடர்ச்சி »