கடலோர காவல்படைக்கு புதிதாக 250 கப்பல்கள், 100 விமானங்கள்

இந்தியக் கடலோர காவல் படைக்கு 250 கப்பல்களும் 100 விமானங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப் போவதாக இந்தியக் கடலோர காவல் படை தளபதி, இன்ஸ்பெக்டர் ஜெனரல் சத்ய பிரகாஷ் ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், 150 கப்பல்களை செய்வதற்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடல் சார்ந்த பாதுகாப்புகளை கடலோர பாதுகாப்பு படை கண்காணித்து வருகிறது. புதிதாக வரப்போகும் கப்பல்கள் கிழக்குப் பகுதியில் பாதுகாப்பின் திறனை அதிகரிக்கும்.

மேலும், கொல்கத்தா, ஓடிசா ஆகிய மாநிலங்களில் தலா 1 கடலோர காவல் படை நிலையமும், ஆந்திர பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் தலா இரண்டு காவல்படை நிலையங்களும், ஆக மொத்தம் 6 கடலோர காவல் படை நிலையங்களை விரைவில் அமைக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது, இந்திய கடலோர காவல் படையிடம் 60 கப்பல்களும் 49 போர் விமானங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No related tamil news found.

You must be logged in to post a comment Login