அஜித் நடித்த மங்காத்தா படத்தை பார்த்த சல்மான்கான்

Tamil Film News - Salmankhan may do Ajith's Mangathaஇந்தி படங்களை ரீமேக் செய்யும் தமிழ் சினிமா என்ற நிலை மாறி இப்போது தமிழில் வெளியாகும் பெரும்பாலான படங்களும், இயக்குநர்களும் பாலிவுட் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தி நடிகர்கள் பலரும் தமிழ்ப் படங்களின் உரிமையை வாங்கி இந்தியில் ரீமேக் செய்து கொண்டிருந்தாலும், சல்மான்கானின் கோலிவுட் பார்வை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.

பிரபுதேவாவில் ஆரம்பித்த சல்மான்கான், லாரன்ஸின் காஞ்சானா படத்தையும் இந்தியில் ரீமேக் செய்து அதில் நடிக்கப் போகிறார். இதற்கிடையில் தற்போது அஜித் நடித்த மங்காத்தா படத்தை பார்த்த சல்மான்கான் அப்படத்தின் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறாராம்.

இதற்காக வெங்கட் பிரபுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய சல்மான்கான், உங்கபடத்தை பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. ஆனால் நான் பார்த்த டிவிடி பிரிண்ட் சரியில்லை. நல்ல குவாலிட்டியோடு ஒரு முறை பார்க்க வேண்டும். என்று கூறினாராம். வெங்கட் பிரபுவும் உடனே டிஜிட்டல் பிரிண்ட் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறாராம்.

அப்போது விரைவில் இந்தி மங்காத்தாவை எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.

No related tamil news found.

You must be logged in to post a comment Login