தங்கத்தில் முதலீடு – கோல்டு இ.டி.எப்

Gold ETF investmentsஇன்று பலர் சந்தித்தால் அவர்கள் கேட்பது ‘இன்றைய தங்கம் விலை’ என்ன? என்பதே.

தங்கம் என்றவுடன் நம்மவர்களுக்கு நகை தான் கண்முன்னாடி வந்து நிற்கும்.குறிப்பாக பெண்களுக்கும் தங்கத்திற்கும் அவ்வளவு ராசி.இதுநாள் வரை தங்கத்தை ஒரு அணிகலனாக மட்டுமே பார்த்தவர்கள் இப்பொழுது அதை  ஒரு முதலீட்டு நோக்கிலும் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.காரணம் சில வருடத்திற்கு முன்பு கூட ஒரு கிராம் தங்கம் ரூ.800  ஆனால் இன்று ரூ.2500 தாண்டி சென்று கொண்டிருக்கிறது.சிலர் ‘தங்கத்தில் முதலீடு’என்றவுடன் ஏதாவது ஒரு தங்க நகையை (தேவை இருக்கிறதோ இல்லையோ)வாங்குவார்கள். முதலீடு என்பது ஒரு குறிக்கோள் கொண்டது. அதாவது குறைந்த விலையில் வாங்கி எதிர்பார்த்த லாபம் வந்தவுடன் விற்றுவிடுவது. ஆனால் நம்மவர்கள் தங்க நகைகளை வாங்குவதோடு சரி. அதை விற்கமாட்டார்கள். லக்ஷ்மி தங்களை விட்டு போய்விடுவதைப்போல் ஒரு உணர்வு.

தொடர்பான கட்டுரைகள்:
மியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி)
பங்குச்சந்தை அடிப்படைகள்
தங்க நகை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயம்

பலர் தங்க காசுகளை வங்கி வைத்துக்கொள்வார்கள். இது முந்தைய வழிமுறையைவிட பரவாயில்லை. ஆனால் இந்த இரண்டு வழிமுறைகளிலும் நாம் நம்முடைய பணத்தை சற்று இழக்கவே செய்கிறோம். வாங்கும் போது செய்கூலி,சேதாரம் போன்றவற்றால் சிறிது பணத்தை இழக்கிறோம். அதேபோல் விற்கும்போது அன்றைய மார்க்கெட் விலைக்கு எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.அதிலும் நாம் நம்முடைய பணத்தை இழக்கிறோம்.

சிலர் வங்கிகளில் விற்கப்படும் தங்க காசுகளை வாங்குவார்கள்.எதிர்காலத்தில் நகை செய்ய மட்டுமே இந்த வழிமுறை உபயோகப்படும். ஏனெனில் வங்கிகளில் வாங்கும் தங்க காசுகளை வங்கிகள் திரும்ப வாங்கமாட்டார்கள். சில நகைக்கடைகளிலும் வாங்கிக்கொள்ளமாட்டர்கள்.எனவே இதை ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாக கருதமுடியாது.

எனவே தங்கத்தில் முதலீடு செய்ய ஒரே சிறந்த வழி,ஈ.டி.எப் (E.T.F).EXCHANGE TRADED FUND என்பதன் சுருக்கமே இ.டி.எப். தங்கத்தில் முதலீடு செய்வதால் இதனை “கோல்டு இ.டி.எப்”(GOLD EXCHANGE TRADED FUND(GOLD E.T.F)) என அழைக்கப்படுகிறது. இது ஒரு MUTUAL FUND வகையாகும். பொதுவாக MUTUAL FUND திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதி பங்குகளிலோ, கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்யப்படும். ஆனால் கோல்டு இ.டி.எப் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் தொகையில் 90% தங்கத்திலேயே முதலீடு செய்வார்கள்.

இதன் யூனிட்டுகள் பங்குச்சந்தைகளில் வியாபாரம் ஆவதால்,யூனிட்டுகளை பங்குச்சந்தைகளிலேயே வாங்கலாம்,விற்கலாம்.ஆனால் இதற்க்கு ஒரு டி மேட் (Demat) கணக்கு தேவை.இதில் ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் தங்கத்தை குறிக்கிறது.

புதிய வெளியீட்டின் போது நுழைவுக்கட்டணமாக 1.5% முதல் 2.5% வரை செலுத்தவேண்டியிருக்கும்.ஆனால் பங்குச்சந்தைக்கு வந்த பிறகு ஒரு யூனிட்(1 கிராம்) கூட வாங்கலாம்.அதற்க்கு ப்ரோக்கிங் கமிசனாக 0.5% கொடுத்தால் போதும்.விற்கும் போதும் அதே தான்.இங்கே செய்கூலி,சேதாரம் என்ற பெயரில் 4%,5% இழப்பெல்லாம் கிடையாது.வாங்கும் போதும்,விற்கும் போதும் 0.5%+0.5%=1% தான் மொத்த செலவே.

இந்த திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு மேல் முதலீடு செய்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரி 10%. தங்கத்துல முதலீடு செய்தால் இந்த சலுகையைப்பெற மூன்று வருடம். ஒரு வருடத்திற்குள் இதன் யூனிட்டுகளை விற்றால் அவரவர் வருமானவரி விகிதத்திற்கு ஏற்ப 10%-30% வரி கட்ட வேண்டும். இதுவே தங்கத்தில் முதலீடு செய்யும் போது 30% வரி. மேலும் இதில் முதலீடு செய்யப்படுகிற பணத்திற்கு ‘பங்கு பரிவர்த்தனை வரி’ யான எஸ்.டி.டி (SECURITY TRANSACTION TAX) கிடையாது. இதில் முதலீடு செய்கின்ற பணத்திற்கு தங்கமாக டெலிவரி எடுக்க முடியாது. ஏன் தங்கமாக கண்ணால் பார்க்க கூட முடியாது. இது முழுக்க முழுக்க ஒரு முதலீட்டு திட்டமாகும்.

தங்கத்தில் முதலீடு செய்ய இதுவே சிறந்த வழியாகும்.

                                                                                                                                        -KUMARAN

No related tamil news found.

4 Responses for “தங்கத்தில் முதலீடு – கோல்டு இ.டி.எப்”

  1. vinothkanna says:

    Thanks for good information in our tamil language…. I am working and my savings is 5k per month….Can you explain about brief ….. Whether we can invest that GOLD ETF units systematically for LONG TERM …????

  2. G.R Kumaran says:

    உங்கள் சேமிப்பு தொகை ஐந்தாயிரத்தை மூன்றாக பிரித்துக்கொள்ளவும்.

    ரூபாய் இரண்டாயிரத்தை மியுட்சுவல் ஃபண்டிலும், ரூபாய் இரண்டாயிரத்தை தங்கத்திலும் (கோல்ட் இ.டி.எப்) முதலீடு செய்யலாம். மீதமுள்ள ரூபாய் ஆயிரத்தை ரிஸ்க் குறைந்த வங்கி வைப்பு நிதியில் சேமிக்கலாம்.

    மியுட்சுவல் ஃபண்டில் முதலீட்டு தொகையான ரூபாய் இரண்டாயிரத்தை இரண்டாக பிரித்துக்கொள்ளவும். ரூபாய் ஆயிரத்தை ரிஸ்க் அதிகமுள்ள அதேசமயம் நல்ல வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி ஃபண்டிலும், ரூபாய் ஆயிரத்தை மிதமான ரிஸ்க், மிதமான லாபம் தரக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டிலும் முதலீடு செய்யலாம்.

    பொதுவாக நம் முதலீட்டில், மூன்றில் ஒரு பங்கை மட்டும் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

  3. G.R Kumaran says:

    உங்கள் சேமிப்பு தொகை ஐந்தாயிரத்தை மூன்றாக பிரித்துக்கொள்ளவும்.

    ரூபாய் இரண்டாயிரத்தை மியுட்சுவல் ஃபண்டிலும், ரூபாய் இரண்டாயிரத்தை தங்கத்திலும் (கோல்ட் இ.டி.எப்) முதலீடு செய்யலாம். மீதமுள்ள ரூபாய் ஆயிரத்தை ரிஸ்க் குறைந்த வங்கி வைப்பு நிதியில் சேமிக்கலாம்.

    மியுட்சுவல் ஃபண்டில் முதலீட்டு தொகையான ரூபாய் இரண்டாயிரத்தை இரண்டாக பிரித்துக்கொள்ளவும். ரூபாய் ஆயிரத்தை ரிஸ்க் அதிகமுள்ள அதேசமயம் நல்ல வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி ஃபண்டிலும், ரூபாய் ஆயிரத்தை மிதமான ரிஸ்க், மிதமான லாபம் தரக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டிலும் முதலீடு செய்யலாம்.

    பொதுவாக நம் முதலீட்டில், மூன்றில் ஒரு பங்கை மட்டும் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

  4. Sajitha says:

    I want to investment in abovev systems. How to investment my money in gold and mutual fund.

You must be logged in to post a comment Login