உலகத்தர படிப்புகள்: இந்தியாவில் விரைவில் சிபிஎஸ்இ பள்ளிகளில் அறிமுகம்
இந்தியா முழுவதும் 50 சிபிஎஸ்இ பள்ளிகளில் சர்வதேச தரத்திலான படிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
இப்போது வெளிநாடுகளில் உள்ள 26 சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் வழங்கப்படும் இந்தப் படிப்புகள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெனீவாவில் உள்ள ‘இன்டர்நேஷனல் பேகலோரியட்’ (ஐபி) (International Baccalaureate) என்ற அறக்கட்டளையின் மூலம் வழங்கப்படும் படிப்புகளின் தரத்தில் சிபிஎஸ்இ இன்டர்நேஷனல் படிப்புகள் உள்ளன.
உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி சேர்க்கைக்கு இந்த ஐபி சான்றிதழ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்தியாவில் ஐபி சான்றிதழ்களுக்கு மாற்றான படிப்புகளை வழங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதால், இப்போது சிபிஎஸ்இ இன்டர்நேஷனல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கபில் சிபல் தெரிவித்தார்.
இந்தப் பாடத்திட்டம் மாணவர்களின் கற்பனை வளம், சிந்திக்கும் திறனை வளர்க்கும் விதத்தில் இருக்கும்.





2762.00