கேரள ஆளுநர் பரூக் மரக்காயர் மரணம்
கேரள மாநில ஆளுநர் பரூக் மரக்காயர் நேற்று (ஜன.26) காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் எம் ஓ ஹெச் பாரூக் மரக்காயர் நேற்றிரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 74. புதுச்சேரியைச் சேர்ந்த பாரூக், அம்மாநில முதல்வராகவும் இருந்துள்ளார். அவர் மறைவையொட்டி கேரள மற்றும் பாண்டிச்சேரிசு அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளது.
புதுவை மாநில அரசியலில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்த மரைக்காயர் அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்பட்டார்.
மூன்று முறை புதுவை முதல்வராக இருந்துள்ள இவர், புதுவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கும் 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
2010-ல் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர், பின்னர் 2011 ஆகஸ்ட் 25ஆம் தேதி கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், ஜார்க்கண்ட் முதலவர் அர்ஜுன் முண்டா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பல்வேறு தலைவர்கள் பாரூக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.





2762.00