முல்லைப்பெரியாறு விவகாரம் : மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை

கேரளாவில், முல்லைபெரியாறு அணை பலமாகத்தான் உள்ளது. இதனால் கேரளாவுக்கு ஆபத்து நிகழப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறிய கருத்தினால், கேரள கூட்டணி கட்சியான கேரள காங். (மாணி) மீது காங்கிரஸ் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நாளை (புதன்) முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரளாவில், அனைத்து கட்சியினரின் நடவடிக்கை கமிட்டி கூட்டம் நடக்கிறது. மாநிலம் தழுவிய ஸ்டிரைக் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முல்லை பெரியாறு அணை குறித்து மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்களால் கேரள கூட்டணி அரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழகம்-கேரள இடையே பதட்டத்தையும், பரபரப்பினையும் ஏற்படுத்தி வருகிறது. அணை பாதுகாப்புடன் இல்லை. நீர்மட்டத்தை உயர்த்தமுடியாது, அதனை இடித்து புதிய அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது கேரளா . ஆனால் தமிழகமே அணை பாதுகாப்பு குறித்து கேரளா பொய் பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசில் கேரள காங்கிரஸ் கட்சி (மாணி) பிரிவைச் சேர்ந்த அஷ்வினிகுமார் , முல்லை பெரியாறு விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்ததால் அங்கு கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அஸ்வினி குமார் தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ளார்.

நேற்று கோட்டயத்தில் அவர் கூறுகையில், முல்லைபெரியாறு அணை பலமாகத்தான் உள்ளது. இதனால் கேரளாவுக்கு ஆபத்து நிகழப்போவதில்லை என்றார். மத்திய அமைச்சரின் இந்த கருத்தினால் கூட்டணி கட்சியான கேரள காங். (மாணி) மீது காங்கிரஸ் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நாளை (புதன்) முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரளாவில், அனைத்து கட்சியினரின் நடவடிக்கை கமிட்டி கூட்டம் நடக்கிறது. மாநிலம் தழுவிய ஸ்டிரைக் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கேரள காங்கிரஸ் கட்சியின் பி.சி. ஜியார்ஜ் கூறுகையில், நடவடிக்கை கமிட்டியின் முடிவிற்கு, காங்கிரஸ் கட்சி (மாணி) தார்மீக ஆதரவு தரும் எனவும் , முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் , காங்கிரஸ் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

மேலும் அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் பி.ஜெ. தாமஸ் கூறுகையில், மத்திய அமைச்சர் அஸ்வினி குமாரின் பேச்சு வருத்தமளிக்கிறது. கூட்டணி கட்சியில் இருந்து கொண்டே இது போன்று கருத்தினை தெரிவித்திருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலையிட வேண்டும் என்றார்.

You must be logged in to post a comment Login