பரூக் மரைக்காயர் உடல் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம்

கேரள மாநில ஆளுநர் பரூக் மரக்காயர் நேற்று இயற்கை எய்தினார். அவரது உடல் இன்று (ஜன.27) அடக்கம் செய்யப்படுகிறது.

புதுவை மாநில முன்னாள் முதலமைச்சரும் கேரள மாநில ஆளுநருமான பரூக் மரைக்காயர் கடந்த 1 1/2 மாத காலமாக உடல்நலக் குறைவினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இரவு 9.20 மணியளவில் பரூக் மரைக்காயர் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. இதனை தொடர்ந்து அவரது உடல் நேற்று இரவே புதுவைக்கு கொண்டு வரப்பட்டு, புதுவை சுய்ப்ரேன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு இன்று காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பரூக் மரைக்காயர் உடல் இன்று மாலை 4 மணிக்கு உப்பளம் முஸ்லீம் அடக்கஸ்தலத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

அவரது மறைவையொட்டி புதுவை மாநிலத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகை, சட்டப்பேர்வை வளாகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

No related tamil news found.

You must be logged in to post a comment Login