டி-20 போட்டி: 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா
மெல்பர்னில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் பிரவீண்குமார், ராகுல் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வினய் குமார், ரவீந்திர ஜடேஜா, தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர். அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் எடுத்தது.
தற்போது இந்திய அணி 132 ரன் வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.





2762.00