சென்னையில் வழிப்பறிக் கொள்ளையர்கள் 2 பேர் கைது

சென்னையில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொண்டித்தோப்பைச் சேர்ந்த மாயக்கிருஷ்ணன் (52) என்பவர் நேற்று இரவு (ஜன.26) அப்பகுதியில் உள்ள சின்னத்தம்பி தெருவில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 2 பேர் அவர் அணிந்திருந்த 1 சவரன் தங்கச் சங்கிலியையும், ரூ 200 பணத்தையும் பறித்துக் கொண்டு ஓடினர். உடனே மாயக்கிருஷ்ணன் கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு அவர்கள் இருவரையும் துரத்திப் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுதொடர்பாக மாயக்கிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் கொண்டித்தோப்பைச் சேர்ந்த ஜானகிராமன் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரியவந்தது.

No related tamil news found.

உங்கள் கருத்தை பதிவு செயுங்கள்